இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எத்தனையோ உத்திகளைக் கையாளுகின்றனர். பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று பார்க்குமிடமெல்லாம் அந்தப் பெயரை தெரியச் செய்வதில் நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காண்பிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பணியைச் செய்கின்றன. ஒரு பெயர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானால் அது அவர்கள் மனதை விட்டு நீங்காது என்பது தொழில் யுகத்தில் வணிகத்தில் ஓர் உத்தியாகக் கருதப்படுகின்றது.
இதில் அரசியல் தொண்டர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். தங்கள் இயக்கத்தின் கொடியையும் சின்னங்களையும் தலைவருடைய படங்களையும் எல்லா இடங்களையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இன்றைய வணிக உலகம் இதற்கு ஙிக்ஷீணீஸீபீவீஸீரீ– ஏன்று பெயர் சூட்டி இருக்கின்றது. நாம் எதை பிரபலப்படுத்த விரும்புகிறோமோ அதன் பெயர் எங்கும் எல்லா இடங்களிலும் நிலவும்படிச் செய்வது, — ஙிக்ஷீணீஸீபீவீஸீரீ என்கிற கோட்பாட்டின் ஒரு அம்சம்.
மேலே குறிப்பிட்ட அனைத்துமே பயன் கருதிச்செய்யப்படுபவை. ஆனால் நாயன்மார்களில் பயன்கருதாத பேரன்போடு தான் குருநாதராக ஏற்றுக்கொண்ட ஓர் அருளாளரின் பெயரை ஏல்லாவற்றுக்கும் சூட்டி மகிழ்ந்தவர். அப்போது அடிகளார் வீட்டில் இருக்கின்ற அளவைகளாகிய படி மரக்கால் போன்றவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றுதான் பெயர். அவர் வளர்க்கிற கால்நடைகளுக்கும் திருநாவுக்கரசு என்பதுதான் பெயர். பெற்ற பிள்ளைகளுக்கும் பெரிய திருநாவுக்கரசு, சிறிய திருநாவுக்கரசு என்றுதான் பெயர்.
இத்தகைய இயல்பு கொண்ட அப்பூதி அடிகளை அறிமுகப்படுத்துகிறபொழுது,
“உலகெலாம் அரசன் நாமம் சாற்றும் அவ்வொழுக் கலாற்றார்” என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். வீட்டில் இருக்கும் அளவைகளுக்கும் பிள்ளைகளுக்கும் கால்நடைகளுக்கும் இப்படி பெயர் சூட்டினால் போதுமா. அந்த ஊரில் அப்பூதி ஆடிகள் நிகழ்த்தி வருகிற அறப்பணிகள் அனைத்துக்குமே திருநாவுக்கரசர் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பூதி அடிகள் கட்டிய மடங்களுக்கு திருநாவுக்கரசர் மடம் என்று பெயர்.
அவர் அமைத்திருக்கின்ற தண்ணீர்ப் பந்தலுக்கு திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல் என்று பெயர். இப்படி எத்தனையோ அறங்கள் அவர் செய்கிறார். அத்தனைக்கும் திருநாவுக்கரசரின் பெயரைத்தான் அவர் சூட்டியிருக்கிறார்.
இதில் என்ன வியப்பு என்றால் இதுவரையில் அவர் திருநாவுக்கரசரை நேரில் தரிசித்தது கிடையாது. ஆனால் திருநாவுக்கரசரின் தொண்டு நலம் பற்றி கேள்விப்பட்டு இறைவனுக்கு அவர் தன்னை அடிமைப்படுத்திக் கொண்ட முறைமையின் மேன்மையை உணர்ந்து எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரை அப்பூதி அடிகள் சூட்டியுள்ளார்.
இன்று பன்நாட்டு நிறுவனங்கள் Branding என்ற பெயரால் செய்கிற எத்தனையோ உத்திகளை மிஞ்சி நிற்கிற வல்லாண்மை அப்பூதி அடிகளின் வல்லாண்மை. வெறுமனே ஒரு விளம்பர அடிப்படையில் மட்டும் அப்பூதியடிகளின் புராணத்தை நாம் அணுகுவோமேயானால் நவீன யுகத்திற்கும் பொருத்தமாக இருக்கிற அந்த உத்தி மட்டுமே நம் புத்திக்குப் புலப்படும்.
மரபின் மைந்தன் ம.முத்தையா