1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது.
2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.
3. நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுவிடுகிறது.
4. ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்!
5. பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும் பகிர்ந்துகொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான்.
6. வாழ்க்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா-? “எடுப்பவர்கள் இழக்கிறார்கள். கொடுப்பவர்களே பெறுகிறார்கள்.”
7. வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால், உங்களிடம் தாவிக் கொண்டு வருகிறது.
8. ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் நீங்கள் தேட வேண்டியது, வாய்ப்பைத்தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!!
9. நீங்கள் ஒன்றைத் தொடங்காதவரை, சென்றடைவது எப்படி?
10. நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம், நிகழ்காலம்தான்!
11. சில விஷயங்கள் தவறாய்ப் போகலாம். நீங்களும் அதனோடு போகாதீர்கள்.
12. நிகழ்ந்திருப்பவற்றிலேயே நிகரற்ற அதிசயம் நீங்கள்தான்!
– மரபின் மைந்தன் ம.முத்தையா
நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…