நான்காம் திருமுறை உரை
இந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார். இந்த உலகியலை ஒத்துப்போவதற்காகத்தான் பழமொழிகள் வந்தன.
ஒருமுறை கவியரசு கண்ணதாசன் அழுகை என்ற தலைப்பில் கவிதை பாடினார். வாழ்க்கையில் எவ்வளவு முறை அழுவீர்கள் என்று அவரை கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார். நான் எல்லாவற்றையும் பட்டுபட்டுதான் திருந்தியிருக்கிறேன்.
அவர் சொன்னார், அனுபவத்தினால் அறிந்தார் நாவுக்கரசர் பெருமான் என்று.
கண்ணதாசன்,
தொட்டபின் பாம்பென்றும் சுட்டபின் நெருப்பென்றும்
பட்டபின் உணர்வதே என்பழக்கமென்று ஆனபின்பு
கெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும்
பட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு.
என்கிறார்.
பட்டால்தான் ஒருத்தனுக்கு புத்திவருமென்ற பழமொழி நாவுக்கரசர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறார், ஒரு குறிக்கோள் இல்லாமல் வெறுமனே வாழ்க்கையை வாழ்ந்து பாலுக்கு நீர் வைத்தேன் என்கிறார்.
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
அடிபட்டுதான் தேறுவார் என்பதற்கு நானே உதாரணம் என்றார்.
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.
என்று பாடுகிறார். இது மிகவும் அருமையான இடம்.
-மரபின் மைந்தன் முத்தையா
(தொடரும்)