“ஈஷா உள்ளே வெளியே” என்ற இந்த நூல் ஈஷாவைப் பற்றிய விளக்கங்களை தரும் நூல் மட்டுமல்ல.மனிதன் தான் அகரீதியான உணர்வுகளை எவ்வாறு உணர்ந்து இறைவழி அதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு வேத நூலாகவே இந்நூல் விளங்குகிறது.
இங்கு அறியப்படும் ஒரே ஆற்றல் அது பேறாற்றலான ஆதிசிவன் மட்டுமே.இதை ஒவ்வொரு வரிகளிலும் நாம் உணரும் வண்ணம் , ஆசிரியர் எழுதியிருப்பது அவர் ஞானத்தை வெளிப்படுத்தும் ஞானசாரமாகவே இந்நூல் திகழ்கிறது.
“ஈஷா” எப்படி உயிரின் ஆற்றலை அறிவியலோடு இணைத்து உருவாக்கப்பட்ட கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்நூல் விளக்கமாக உணர்த்துகிறது.
“ஈஷாவை” பற்றி அவதூறுகளைப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்களின் மனதின் இருளை அகற்றும் அகல் விளக்காக ஒளிரும் விளக்கமாக இந்நூல் பிராகசிக்கிறது.
ரம்யா கார்த்திகேயன்