நாவலின் நிறைவில் காளியாய் அலறி எழுந்து கோயில் கொள்கிறாள்.
ஒன்பது வயதில் அவள் பருவம் எய்தியது பற்றி ஆயர்குடிப் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்.” இந்த மரம் எளிதில் தீப்பற்றும்” என்கிறாள் ஒருத்தி. (ப-20)
அப்படி தனிமையில் அமர்த்தப்பட்ட நிலையில்தான் ஒன்பது பிராயத்தள் ஆகிய ராதை குழந்தைக் கண்ணனின் வருகையை அறிந்துஅவனைத் தேடி ஓடுகிறாள்.
கண்ணெதிரே விரியும்பிரம்மாண்டமான திரைச்சீலையில் விதம் விதமாய் காட்சிகள் தோன்றும்போது நம் இருப்பை ஸ்திரப்படுத்துவது நம்மை தாங்கும் அந்த மடி தான்.
” விண்ணில் இருந்து நோக்கும் தெய்வங்களுக்கு கீழே விரிந்து இருக்கும் நதிகளும் மலைகளும் நாடுகளும் நகரங்களும் கொண்ட விரிநிலம், ஒரு பெரும் ஆடுகளம். அதைச் சுற்றி அமர்ந்து அவர்கள் சிரித்து அறைகூவியும் தொடை தட்டி எக்களித்தும், காய் நகர்த்தி களி கொண்டு விளையாடுகிறார்கள். கைநீட்டி காய் அமைக்கும் தெய்வத்தின் கரங்களுக்கு தெரிவதில்லை கீழே கண்ணீரும் குருதியுமாக கொந்தளித்து அமையும் மானுடச் சிறுவாழ்க்கை” என்கிறார் ஜெயமோகன் (ப-39)கம்பர் இதையே “அலகிலா விளையாட்டு” என்கிறார்.” உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
இங்கே ஒன்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். பாகவதக் கதைகளில் ராதை பற்றிய குறிப்பு பின்னால்தான் வருகிறது. எனவே ராதை என்கிற பாத்திரமே கற்பனையான இடைச்செருகல் என்று கொள்ளலாமா என்று ஓஷோவிடம் கேட்டார்கள்.
அதற்கு ஓஷோ,” அப்படி இல்லை. ராதை தான் என்கிற தன்மையே இன்றி கண்ணனுடன் முழுதாக ஒன்றிப் போனவள். அவளைத் தனியாக பிரித்தறிய சிறிது காலம் ஆனது” என்றார். இந்த எண்ணம் பாரதியிடமும் வெளிப்படுவதை எட்டயபுரமும் ஓஷோபுரமும் எனும் என் நூலில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/1.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/blog-post_27.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/3.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/4.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/5_26.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/6.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/7.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/09/8.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/10/9.html
http://marabinmaindanmuthiah.blogspot.in/2014/10/10.html
Comments