- மழைக்கொரு கணக்கு வைத்தாள்;
- முளைத்திங்கே மெல்ல மெல்லத்
- தழைக்கிற பயிருக்கெல்லாம்
- தயாபரி கணக்கு வைத்தாள்;
- இழைக்கொரு கணக்கு வைத்தாள்;
- இங்கேநான் நாளும் செய்யும்
- பிழைக்கொரு கணக்கு வைக்கப்
- பராசக்தி முயன்று தோற்றாள்;
- பார்வையின் எல்லைக்குள்ளே
- பத்திரமாய்த்தான் வைத்தாள்
- ஆர்வத்தால் வினைகள் சேர்த்தால்
- அவள்பாவம் என்ன செய்வாள்?
- சேர்வதைப் பெருக்கித் தள்ளி
- செத்தையைக் கூட்டித் தள்ளி
- சோர்வுடன் நிமிர்வாள் -நானோ
- சேற்றினைப் பூசி நிற்பேன்
- சொன்னசொல் கேளாப் பிள்ளை
- செல்லமாய் வளர்த்து விட்டால்
- என்னதான் சிரமம் என்றே
- என்வழி அறிந்து கொண்டாள்
- இன்னமும் பொறுமை காத்தே
- இதமாக சொல்லிப் பார்த்தே
- தன்வழி திருப்பப் பார்க்கும்
- தயையினை என்ன சொல்வேன்!
- கோபத்தில் காளியாமே?
- கோரமாய் சிரிப்பா ளாமே?
- ஆபத்தில் அள்ளிக் கொள்ளும்
- அன்பைத்தான் நானும் கண்டேன்
- நாபிக்குள் ஓங்காரத்தின்
- நாதத்தில் பொலிந்து தோன்றும்
- ரூபத்தில் அழகின் எல்லை
- ருணம் நீக்கும் செஞ்சொல் கிள்ளை
;
ஆரவத்தால் வினைகள் சேர்த்தால்
அவள் பாவம் என்ன செய்வாள். ..