திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம் அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம்.