ஏன்னுடைய 60ஆவது புத்தகம் 23.05.2016 அன்று மலேசியாவில் வெளியிடப்படுகிறது. கவிதை வாழ்க்கை வரலாறு ஆன்மீகம் இலக்கியம் மொழிபெயர்ப்பு திறனாய்வு,சுய முன்னேற்றம் உட்பட பல்வேறு துறைகளில் இதுவரை 59 நூல்கள் வெளிவந்துள்ளன. 60 ஆவது புத்தகமாக ” இணைவெளி” எனும் தலைப்பில் கவிதைநூல் வெளிவருகிறது. இந்நூலில் அந்தரங்கம், பகிரங்கம், அமரத்துவம்,தெய்வீகம் ஆகிய நான்கு பகுதிகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இதனை மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறைதுணை அமைச்சர் டத்தோ.சரவணன் 23.05.2016 மாலை 6 மணியளவில் வெளியிடுகிறார். மலேசிய தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டத்தோ எம்.சங்கரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.தேசிய நலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி திரு.டத்தோ.பி.சகாதேவன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழுத் தலைவர் திரு. பெ.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.இந்நூலை ஃபுட் பிரிண்ட்ஸ் பதிப்பகம் பதிப்பித்துள்ளது.
இவ்விழாவில் கண்ணதாசனின் சந்தங்கள் என்னும் தலைப்பில் நான் சிறப்புரை நிகழ்த்துகிறேன்.முன்னதாக, தாப்பாவில் மே 21ஆம் நாள் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு தாப்பா எழுத்தாளர்-வாசகர் பண்பாட்டு இயக்கம் நிகழ்த்தும் கண்ணதாசன் விழாவில் பேசுகிறேன்.
மே 22ஆம் நாள் கிள்ளாங்கில் மாலை 5 மணிக்கு மலேசிய ஆறுநாட்டு வேளாளர் சங்க அரங்கம்,62ஏ ஜலன் ராயா பரத் கிள்ளாங் எனும் முகவரியில் ஈஷா யோக மையத்தின் மலேசிய நாட்டு தியான அன்பர்களின் கூட்டத்தில் சொற்பொழிவு நிகழ்த்துகிறேன்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்