வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
மின்னலும் இடியும்தான் மழை வருவதன் அடையாளங்கள். வானம் பார்த்து வாழ்கிற மனிதர்கள் மேகங்கள் திரண்டு வந்தாலும் கூட கலைந்து விடுமோ என்ற சந்தேகத்தில்தான் இருப்பார்கள். மின்னல் வந்த பின்தான் மழைக்கான நம்பிக்கையைய் பெறுவார்கள்.
உங்கள் வாழ்க்கை என்னும் வானத்தில் கூட ஒரு மின்னல் மின்னிய பிறகே மாற்றங்கள் வந்திருக்கும். என்ன செய்வதென்று குழம்பித் தவிக்கையில் யோசனை மின்னல், உள்ளத் சோர்ந்திருக்கும் நேரத்தில் ஊடுருவிப் பாயும் உற்சாக மின்னல், வருத்தத்தைக் கிழித்துக் கொண்டு செல்கிற ஊக்க மின்னல், தோல்விகள் வழங்கும் நம்பிக்கை மின்னல்கள் என்று இவை ஏராளம்.
உங்களுக்குள் உதிக்கப்போகும் அந்த அதிசய மின்னலை உருவாக்கத்தான் உங்கள் கனவுகளையும் உழைப்பையும் விலையாகத் தரப்போகிறீர்கள்.
அதன் பிறகு வெற்றிப்பாதை, செல்வமழை, பாராட்டு மழை எல்லாமே இலவசம்தான்!!