வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
நிறைவேற்றவேண்டுமென்று நினைக்கின்ற கனவுகளை எல்லா நேரங்களிலும் மனதில் பதித்துக் கொள்வது, முயற்சியின் முக்கிய அம்சம்.
உங்கள் கனவுகள் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கரை காணாத காதலின் அடையாளம் இது. தன் இலட்சியம் நோக்கி முழு முனைப்போடும் கவனக் குவிப்போடும் இருக்கிறமனிதன், என்ன கனவு காணுவான்? தன் இலட்சியத்தைத்தான் கனவு காணுவான்? தன் இலட்சியத்தைத்தான் கனவு காணுவான்.
சில சமயம், பாதியிலேயே இது கனவு என்று புரிந்துவிடுமல்லவா, அப்போதுகூட தன் கனவைக் கண்டுகொண்டிருப்பதாகவே கனவு காணுவான்.
கனவுகளுக்கு அளவுகள் இல்லை. அளவில்லாத கனவுகள் மட்டுமே அசுர சாதனைகளின் அடித்தளம்.