வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான்! வருபவர்கள் எல்லோரும் உங்கள் பயணத்திற்கு துணை செய்தாலும் செய்யாவிட்டாலும் பயணம் உங்களுடையது.
நீங்கள் கூட்டிக்கொள்ளும் பிரார்த்தனை, நெஞ்சில் சேர்க்கும் நம்பிக்கை, கருதியதை சாதிக்கும் செயல்திறன் ஆகியவைதான் உங்கள் இலக்கை எட்டத் துணை செய்யும்.
“அவரை மலைபோல் நம்பினேன். கைகழுவிவிட்டார். இவரை ஏகத்துக்கும், எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள் தன்னிகரத்தைத் தவிர எதையும் தராது..
உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவாதவர்கள் பற்றிய சலிப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்கள் உற்சாகத்தைக் குன்றச் செய்வதைவிட வேறொன்றும் செய்யாது.
உங்கள் பாதை, உங்கள் இலக்கு-. உங்கள் திட்டம். உலகம் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி தொடர்ந்தால் வளர்ச்சி. இந்தத் தெளிவுடன் யாரெல்லாம் நடையிடுகிறார்களோ அவர்களுக்கு புலம்பவோ, புகார் சொல்லவோ நேரமிருக்காது.
இருக்கும் நேரத்திற்குள் இயன்றஉயரங்களை எட்ட முயல்வதே புத்திசாலிதனம். அதற்கு வேண்டியது மலையளவு மனஉறுதி. உங்களை நீங்களே நம்புங்கள். இன்னும் தொடர்ந்து சொல்லுங்கள்.