வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

சிதறிக்கிடக்கும் திறமைகள் ஒன்று சேரும்போதே அற்புதம் நிகழ்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் திறமைகள் ஒன்று சேர்ந்தால் அது பெரிய அற்புதமாய் கருதப்படுகிறது.

வண்ணத்திரையில் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. சின்னத் திரையின் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. இவற்றை திரையரங்கிலும், வீட்டிலும் வாய் பிளந்து பார்த்துவிட்டு அலுவலகம் வந்தால் அடித்துக்கொண்டு சாகிறோம்.

என்னுடைய திறமையால் ஏற்பட்ட வெற்றியில் இன்னொருவருக்குப் பங்கா என்னும் போட்டி மனப்பான்மையில்தான் பலபேர் வாழ்கிறோம்.

நம்முடைய திறமை மட்டும் தனித்து நின்று எந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிடாது. உங்கள் விற்பனைத் திறமையை வாடிக்கையாளரிடம் காட்ட பயணம் செய்கிறீர்கள் என்றால், அதற்கு ஓட்டுநரின் திறமையும் வேண்டியிருக்கிறது. திறமைகளை ஒருங்கிணைப்பதில் செலுத்தும் கவனம், உலகின் கவனத்தை ஈர்க்கும் உன்னதமான செயல்களை நிறைவேற்றிக் கொடுக்கும்.

நீங்கள் திறமையாளராக இருந்தால் மட்டும் போதாது. திறமைகளை ஒருங்கிணைக்கும் திறமையாளராய் இருப்பதே முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *