(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண் கவிஞர்.)
The Child’s First Grief
Oh, Call my brother back to me
I cannot play alone,
The summer comes, with flowers & bee
Where is my brother gone?
The flowers fun wild, the flowers we sowed
Around our garden tree;
Our vine is dropping with its load
Oh! Call him back to me;
We wouldn’t hear thy voice, fair child,
He may not come to thee;
His face that once, like summer smiled,
On earth, no more, tho-ult See;
A rose’s brief bright life of joy,
Such unto him was given
Go, thou must play alone, my boy
Thy brother is in heaven;
And has he left his birds & flowers?
And must I call him in Vain?
And through the long, long summer hours,
Will be not come again?
And by the brook in the glade
Are all our wanderings over?
Oh! while my brother played with me
Would I have loved him more?
ஒரு குழந்தையின் முதல் துயரம்
தம்பியை மறுபடி கூப்பிடுங்கள் & நான்
தனியாய் எப்படி விளையாட?
தும்பிகள் வந்தன; கோடையும் வந்தது;
எங்கவன் ஒளிந்தான் நான்தேட?
தோட்டத்தில் நாங்கள் தூவிய விதைகள்
பூத்ததைப் பார்க்கட்டும் கூப்பிடுங்கள்
பூக்களின் சுமையில் ஆடுது கொடிகள்
பார்க்கணும் அவனுடன் கூப்பிடுங்கள்!
“உன்குரல் கேட்க வழியில்லை மகனே
உயரத்தில் மறைந்தான் உன் தம்பி!
பொன்னொளி சிந்தும் புன்னகை மின்ன
இனிவர மாட்டான் உன்தம்பி!
பூவினைப் போலவன் ஆயுள் அமைந்தது
போய் மறைந்தானே முகிலோடு!
தேடி அழைத்தும் வரவே மாட்டான்
தனியாய் இனிமேல் விளையாடு!”
பறவைகள், மலர்கள், அனைத்தையும் மந்து
போய்விட்டானா என்தம்பி?
உருளும் கோடையில் ஒருநாளாவது
வரமாட்டானா என்தம்பி?
ஓடையின் ஓரம், காடுகளோடும்
தனியாய் எப்படி நடக்கட்டும்?
ஆடிமகிழ என் தம்பி இல்லையே,
யாரிடம் அன்பைச் செலுத்தட்டும்?
(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)