(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண் கவிஞர்.)
The Child’s First Grief
W.H.Long Fellow
THE DAY IS DONE
The day is done, and the darkness
Falls from the wings of Night,
As a feather is wafted downward
From an eagle in his flight.
I see the lights of the village
Gleam through the rain & the mist,
And a feeling of Sadness comes over me,
That any soul cannot resist.
A feeling of sadness & longing
That is not akin to pain,
And resembles to sorrow only
As the mist resembles the rain.
Come, read to me some poem
Some simple & heartfelt lay,
That shall soothe this restless feeling,
And banish the thoughts of day.
Not from the grand old masters,
Not from the bards sublime,
Whose distant footsteps echo
Through the corridors of time.
For, like strains of marital music,
Their mighty thoughts suggest
Life’s endless toil & endeavour
And tonight I long for rest.
Read from some humble poet,
Whose songs gushed from his heart,
As showers from the clouds of summer
Or tears from the eyelids start.
Who, through long days of labor,
And nights devoid of ease,
Still heard in his soul, the music
of wonderful melodies.
Such songs have power to quiet
The restless pulse of care,
And comes like the benediction
That follows after the prayer.
Then read from the treasured volume
The poem of thy choice
And lend to the rhyme of the post
The beauty of thy voice
And the night shall be filled with music
And the cares, that infest the day
Shall fold their tents like the Arabs
And as silently steal away.
ஒரு பகலுக்குப் பின்னால்….
பறந்து விரியும் கழுகின் இறகு
தரையில் விழுநதல் போலே,
இருளும் உதிரும், இரவின் சிறகில்
இருந்திவ் வுலகின் மேலே!
பனிக்கும் மழைக்கும் நடுவில் தெரியும்
மங்கலான வெளிச்சம்
எனது உயிரில் படியும் துயரம்
பாரமாகக் கனக்கும்!
ஏங்க வைக்கும் ஏதோ ஒன்று
வலியா? வலியும் இல்லை!
மழையும் பனியும் ஒன்றுபோலத்
தோன்றும்… ஒன்று அல்ல!
பகலில் விளைந்த அவதி விலக
அருகில் கொஞ்சம் இருந்து
இதயம் வருடும் எளிய கவிதை
வரிகள் தேடி வழங்கு!
வருடம் கழிந்தும் யுகங்கள் கழிந்தும்
மகத்துவத்தில் விஞ்சும்,
பெரிய பெரிய புலவர் கவிகள்
நுகர மனது அஞ்சும்!
அவர்தம் உயர்ந்த வரிகள் வழியென்
வலியும் அதிகம் ஆகும்;
மனதை வருடும் எளிமை நிறைந்த
கவிதை ஒன்று போதும்!
முகிலில் இருந்தும், இமையில் இருந்தும்,
இறங்கும் மழைபோல் வருடும்.
எளிய கவிதை வரிகள் எனக்கு
இதய அமைதி வழங்கும்!
உலகின் துயரில் உழலும் கவியின்
வலிகள் பலவும் கடந்து
மலரும் கவிதை பொழியும் இசையில்
அமைதி ததும்பும் நிறைந்து!
பதறும் மனதில் அமைதி படிய
அவனின் வரிகள் உதவும்;
தவங்கள் புரிந்து எழுந்த நிறைவு
மனதில் வந்து நிலவும்!
அதற்குப் பிறகுன் இதயம் விரும்பும்
கவிதை எதையும் மொழிக;
கவிதை அழகு மிளிர உனது
குரலின் அழகைத் தருக!
இரவு முழுதும் இசையில் ததும்ப,
பகலின் வலிகள் அகலும்!
அரபியர்போல் இடம்பெயர்ந்தென்
அவலம் முழுதும் விலகும்!
(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)