ஈரோட்டில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு இலக்கிய ரசிகர் அவர். பெண் பேச்சாளர்கள் வந்தால் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். நல்ல முரடர். நாகப்பட்டிணத்திலிருந்து சென்ற ஓர் அம்மாள் அவரை ஓங்கி அறைந்தார். அவரை கிண்டலாக திருமேனி தீண்டுவார் என்று முன்பெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அப்பாலும் அடி சார்ந்தார் ஆகிவிட்டார். சிவத்தொண்டு மட்டுமில்லை. சமூகத் தீமைகளை எதிர்த்தாலும் கூட தொண்டர்களுடைய வீரம் நமக்கு வர வேண்டும் என்று சொல்கிறேன். அப்போது நாவுக்கரசர் சொல்லுகிறார். நான் அடியவன்தான் சிவனை வணங்குபவன்தான். ஆனால் ஒன்றை மறந்து விடாதே. நீதியாய் வாழமாட்டேன்; நித்தமும் தூயேன் அல்லேன்.
தினம் தினம் நான் ஒழுங்கானவன் என்று நினைக்காதே. எனக்கும் வாழ்க்கையில் பிரச்சினை உண்டு. கொஞ்சம் அப்படி இப்படி சறுக்கிப் போவேன். ஒருநாள் பூஜை செய்யமறந்துவிடுவேன். ஒருநாள் கும்பிட மறந்துவிடுவேன். ஒரு நாள் கும்பிடமாட்டேன்.
நீதியாய் வாழமாட்டேன் நித்தமும் தூயேன் அல்லேன்
ஓதியும் உணரமாட்டேன்; உன்னையுள் வைக்கமாட்டேன்
சோதியே சுடரே உன்றன் தூமலர் பாதம் காண்பான்
ஆதியே அலந்து போனேன்.
இவ்வளவுதான்.
நாமெல்லாம் நூற்றுக்கு நூறு ஒழுங்காகிவிட்டுத்தான் சிவனை கும்பிடுவோம் என்றால் சிவன் காலம் முழுவதும் காத்துக்கிடக்க வேண்டிதான். நாம் என்றைக்கு ஒழுங்காகி சிவனை கும்பிடுவது. நாவுக்கரசர் சொல்கிறார் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார். பிறப்பதற்கே சாகிறான். சாவதற்கே பிறக்கிறான். அப்படியென்றால், சிவன் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விடும் அவருக்கு. என் இறைவா நான் குறைகள் உள்ளவன். என்னை என் குறைகளுடன் ஏற்றுக்கொள் என்கிறபோது மனதில் குற்றணர்வு நீங்குகிறது. இதைத்தான் நாவுக்கரசர் பெருமான் விண்ணப்பிக்கிறார்.
நீதியால் வாழ மாட்டே னித்தலுந் தூயே னல்லேன்
ஓதியு முணர மாட்டே னுன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன் றூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.
எனக்கு எவ்வளவு குறைகள் இருந்தாலும், எவ்வளவு களங்கங்கள் இருந்தாலும், இறைவா உன் திருவடிகளை காணவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறதே அதுமட்டும் சத்தியம். இதனால் என்னை ஏற்றுக்கொள் என்கிற ஓர் அற்புதமான வாக்குமூலத்தை நாவுக்கரசர் பெருமான் அருளுகிற அற்புதத்தை நாம் பார்க்கிறோம்.
என்றைக்குமே காலம் மதிக்கிற விஷயமாக வா-ழ்க்கையில் சில காரியங்களை செய்ய வேண்டுமென்றால், யார் காலத்தை மதிக்கிறார்களோ அவர்கள்தான் காலம் மதிப்பதுபோல சில காரியங்களைச் செய்கிறார்கள்