யார் யோகி? – 2
இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என்கிறார் கம்பர். வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம் என்று பெயர். பேரின்பத்தில் பொருந்துதலாகிய இறையின்பத்திற்கும் போகம் என்று பெயர் “சிவபோகம்” என்பது ஓர் உதாரணம். சிவ போகத்துக்கான பாதை சிவயோகம் ஆகும். உலகியல் ஆனாலும், அருளியல் ஆனாலும், எய்த விரும்பிய இன்பத்தை அடைவதற்கான வழியில் செயல்பட்டு, அந்த இன்பத்தை அடைதல் ...
யார் யோகி? – 1
யோகம் என்னும் சொல்லின் இயல்பை மீண்டும் ஒருமுறை ஆராய்வோம். யோகம் என்றால், ஒருமை, பொருந்துதல் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பதஞ்சலி முனிவரைக் கேட்போம். யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகிறார்கள் என்கிறார் பதஞ்சலி. “ததா த்ராஷ்டு ஸ்வரூபேஸ வஸ்தானம்” என்பது பதஞ்சலி சூத்திரம். உடல், மனம் என்னும் அடையாளங்களைக் கடந்து தன் சுயசொரூபத்தில் பொருந்தியிருத்தலே யோகம் எனப்படும். அதனால்தான், இராம இலக்குவரை தாடகை வதத்துக்காக அங்க நாட்டிற்கு அழைத்துச் செல்லும் விசுவாமித்திரர், அந்த ...
எது யோகம்?
யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர். நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும் பொருந்தி நிகழ்கணத்தின் சாரம் பருகி வாழும் எவரும் யோகியரே! பாம்பணைப் படுக்கையில் முழுதுணர் அறிதுயிலில், நிகழ்கணத்தின் நிலைபேறாய் விளங்கும் இறைவனின் அவதாரம் நிகழுங்காலை, யோகியர் அவரவர் நெறிநின்று, அவதார நோக்கம் நிறைவேறத் துணை புரிந்தார் என்பதை இராமகாதை காட்டுகிறது. இன்னொரு புறம், ...
யோகியர் தரிசன வாயில்
“எழுத்தும் தோன்றிடும் முன்னே – என்றோ இருந்த கவி மனத்துள்ளே விழித்து எழுந்தது பாடல்” என்பார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம். எழுத்து பிறக்கும் முன்னே கவிதை பிறந்தது. இந்த வரிகளை எழுதியவர் இறை நம்பிக்கையாளர் இல்லை எனினும், தெரியாத பகுதிக்கு திசைகாட்டும் பலகையென இந்த வரிகள் விரல்நீட்டும் திசை வேறாகத் தெரிகிறது. படைப்பின் மூலசக்தி தோன்றியதன் பின் பிரபஞ்சம் தோன்றிற்று. பின்னர் தொழிற்பட்ட ஒவ்வொன்றிலும் அந்த மூலசக்தியின் துளிகள் துலங்கின. பொதுவுடைமைச் சிந்தனையாளர் ஒருவர் புறவயமாய் எழுதிய வரியன்றிலேயே, வேறு ...
பணம் எனும் அருவம்
கறுப்புப் பணம் பதுக்கலுக்கும், கள்ளப் பணம் புழக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கை, தற்காலிக சிரமத்தையும் நீண்ட கால நன்மையையும் தரவல்லது! இத்தகைகைய தொடர் நடவடிக்கைகள் விலைவாசியையும் பெருமளவு குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் “பணம்” என்றால் என்ன என்பதை இந்தியர்கள் அனுபவ ரீதியாய் உணர்ந்து கொண்டார்கள். 1. எதிர்பாராத சூழலில் கையில் பணமில்லையே ஓரிரு நாட்கள் சமாளிக்க முடியும். 2. உண்மையில், அன்றாட செலவுக்கான பணத்தேவை மிகவும் குறைவு. 3. ...
நிமிர்ந்து விடு
காலச் சக்கரம் சுழலுது உனது காரியத் திறமை காரணமாய்! தோழா! உனது தோள்களை நம்பித் தொழிலில் இறங்கு வீரியமாய்! தாமதமாகும் வெற்றிகளுக்குத் தோல்விகள் என ஏன் பெயர் கொடுத்தாய்; பூமியின் நியதி! ஒளியும் இருளும்! புரிந்து கொள்ளாமல் மனம் சலித்தாய்! சோர்ந்து போகச் செய்யும் எதையும் சிந்தித்தாலும் தீமை வரும்! தீர்ந்துவிடாத முயற்சி இருந்தால் ஆமை முயலைத் தாண்டி விடும்! ஜனகனின் வில்லைப் போன்றது வாழ்க்கை; சரியாய் வளைத்தால் வளைந்து விடும், மனதில் உள்ள துணிவைப் ...