கம்பனை அறிதல்
(தமிழுக்குப் புனைபெயர் கம்பன் & கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரையை முன்வைத்து) பெருங்காவியங்கள் உருவாகும் வேளையில் அதற்கான நோக்கத்தையும் காவிய ஆசிரியர்கள் அறிவிப்பார்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுதலும்” என, இளங்கோவடிகள், தான் பாட்டுடைச் செய்யுள் நாட்டிட விழைந்தமையின் நோக்கத்தை விளம்புவார். தன் படைப்பின் நோக்கம் கண்ணன் மீதுள்ள பக்தியே என்பது வில்லிப்புத்தூரார் வாக்கு. “மன்னு மாதவன் சரிதம் இடையிடை மன்னுதலால்” என்பார் அவர். இராமன் என்னும் நாயகப் பாத்திரம் ...
இப்படித்தான்
அர்த்தமில்லாத சோகம் உன்னை அடிக்கடி சுற்றிக் கொள்கிறதா? தொட்டதற்கெல்லாம் கோபம் வந்து திடுமென்று சுடுசொல் விழுகிறதா? உற்றவர் மத்தியில் இருக்கும் போதும் உன்னிடம் மௌனம் படிகிறதா? நெற்றி பாரமாய் நெஞ்சில் குழப்பமாய் நித்தம் பொழுது விடிகிறதா? கற்பனை பயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொள்முதல் செய்தால் இப்படித்தான்! அற்ப விஷயங்கள் எதற்கும் நீயாய் அலட்டிக் கொண்டால் இப்படித்தான்! தீர்க்க இயலாச் சிக்கல்கள் எதுவும் இந்த உலகத்தில் என்றுமில்லை! பார்க்கப் பெரிதாய் தெரியும் விஷயம் பக்கத்தில் போனால் ஒன்றுமில்லை! சுருங்கிய ...
வாட்ஸப் பாட்டும் வாழைப் பழமும் (இணையதளம் திரைப்படம் & பாடல் உருவாக்கம்)
ராஜஸ்தானில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முத்தியார் அலி. புகழ்பெற்ற சூஃபி பாடகர். 2016 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியில் அவருடைய இசைநிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது. அந்த விழாவுக்கு வந்திருந்த “இணையதளம்” திரைப்பட இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் முத்தியார் அலியை பாடவைக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்திருந்தனர். அதேபோல, இசையமைப்பாளர் அரோல் கரோலியிடமும் கேட்டுக்கொண்டதையட்டி, அவரும் முத்தியார் அலியுடன் தொடர்பு கொண்டு இசைவு பெற்றுவிட்டார். முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் அதீதமான ஈடுபாடு கொண்டவர்களின் போக்கை அவர்கள் குரலிலேயே விமர்சனம் ...
கனவுகள் எல்லாம் கனிந்துவரும்
வாழ்க்கை என்பது திரைச்சீலை -நீ வரைய நினைப்பதை வரைந்துவிடு! தூரிகை உனது முயற்சிகள்தான் -ஒரு தீண்டலில் கனவுகள் மலரவிடு! கோடுகள் வளைவுகள் எல்லாமே – நீ கொண்ட கனவின் வெளிப்பாடு! மேடுகள் பள்ளங்கள் எல்லாமே – உன் முழுமைக்கான ஏற்பாடு! ஆகாயம் ஒரு திரைச்சீலை – அதில் அக்கினிச் சூரியன் வரைகிறதே! மாலை நேரத்து வெண்ணிலவு – அதில் மாற்றங்கள் கொஞ்சம் செய்கிறதே! நீயாய் வரையும் ஓவியத்தில் – உள்ள நிறங்களைச் சொல்லும் நிகழ்காலம்! ஆனாலும் சில ...
இருளுக்குப் பின்தான் பூபாளம்!
இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்! மருண்டு தவிக்கிற மனிதா&உனது முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்! வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம் வலிகள் தாங்கிப் போராடும்! யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது? இருளுக்குப் பின்தான் பூபாளம்! தற்காலிகம்தான் தோல்விகள் & அவற்றைத் தலைவிதி என்பது பழையகதை! குற்றாலத்து அருவியைப் போல் நீ குதித்துக் கிளம்ப ஏது தடை! சோதனை வருகிறபோதினில் தானே சூரியன் போல் நீ எழவேண்டும்! மேதினி முழுவதும் வெளிச்சம் தெளித்து முடித்த பின்னால் தான் விழ ...
பூமிப் பரப்பில் புதிய தலைமை
பூமிப் பரப்பில் புனிதத் தலைமை புறப்பட்டு வந்தது புதிதாக! சாமி எங்கள் விவேகானந்தன் சத்தியமூர்த்தி வடிவாக! விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது வெட்டிப் பேச்சு வேதாந்தம்! இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது விவேகானந்தன் சித்தாந்தம்! தோல் பந்துக்குள் மூச்சுக் காற்றெனும் தத்துவ மிரட்டல்கள் அவன் வெறுத்தான்; கால்பந்தாட்டம் கடவுளைக் காட்டும் ‘கிளர்ந்தெழு தோழா’ என உரைத்தான்! பொன்னை பொருளை அள்ளிக் குவிப்பவன் பூமியின் தலைவன் ஆவதில்லை! தன்னை வெல்லும் தகுதி இருந்தால் தலைவன் அவன் ...