Blog

/Blog

ரகசியம்தான் அதிசயம்!

பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது; ஊரே உறங்கிக் கிடக்கும் வேளையில் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது! யாரும் அறியா நொடியில் தானே எங்கோ அரும்பு மலர்கிறது! உன்னில் இருக்கும் இலட்சியம் அப்படி உருவம் பெறட்டும் தனிமையிலே! தன்னை இழைத்துத் தவம் போல் தவித்துத் தானாய் மலர்ந்திடு புதுமையிலே! நீயும் நானும் வியக்கிற படைப்புகள் நேற்று வரையில் ரகசியம்தான் ஓய்வில்லாத உழைப்பின் உச்சியில் ஒருநாள் பூத்த அதிசயம்தான்! ...

புதுக் கணக்கு

மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு; புலம்பல் ராகம் பாடுபவர்க்கு புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு; கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது கிழக்கில் தினமும் ஒளிக்கணக்கு; வாழ்வின் போக்கை விளங்கிக் கொண்டால் வரவு வைப்பாய் புகழ்க்கணக்கு; நோக்கம் எதுவென நன்றாய்த் தெரிந்தால் நிச்சயம் வெல்லும் மனக்கணக்கு; வரவு செலவாய் வெற்றி தோல்விகள் வரட்டும்; எழுது நிஜக்கணக்கு; சரியாய் எதையும் செய்து கொண்டே வா; ஒருநாள் வெல்லும் உன் ...

மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்

அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன? கொத்தித் தின்னும் கோழிகள் கூடக் காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன? அத்தனை வெட்டும் தாங்கும் பூமி பூகம்பத்தில் குதிப்பதென்ன? இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டே எல்லாம் இங்கே இயங்கி வரும் என்றோ ஒருநாள் எல்லை மீறிட எல்லாம் நமக்கு விளங்கிவிடும்! உருவம் பார்த்து எடை போடாதே உள்ளே இருப்பது தெரியாது! திரைகள் விலகத் தெரிவது தெரியும் அதுவரை நமக்குப் புரியாது! அவரவர் ...

வசந்தப் போர்க்களம்

புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம் பழைய தோல்விகள் பாடமாகலாம் புதிய வெள்ளத்தில் ஓடமாகலாம் சுழல்கள் யாவுமே பழகிப் போகலாம் சிறிது தூரம்தான்! கரையில் சேரலாம்! உழைக்கும் யாருக்கும் உயர்வு உள்ளது உணர்ந்து வாழ்வதே உனக்கு நல்லது ஜெயிக்கப் பிறந்தநீ எதற்குத் துவள்வது? நெருப்பின் நடுவிலும் சிரிக்கப் பழகிடு! முயலின் கால்களின் புயலின் போர்க்குணம் மானின் கொம்பிலும் வாளின் போர்க்குணம் முயன்று பார்ப்பதே ...

காற்று வீசுது

காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் -இந் நாளை இழந்து தவிக்காதே! பொறுமைத் தவங்கள் முடிகையிலே – நீ புதிய வரங்களை வாங்கிவிடு! உரிமை உள்ளது, அதனாலே – உன் உழைப்புக்கு ஊதியம் கேட்டுப்பெறு! வாள்முனைத் தழும்புகள் இல்லாமல் – ஒரு வீரனின் தோள்களில் அழகில்லை தோல்வியின் சுவடுகள் இல்லாமல் – உன்னைத் தொடுகிறவெற்றியில் சுகமில்லை! கானல் நீரை மறந்துவிடு – உன் கைகளில் தண்ணீர்க் குவளையெடு ...

நானொரு வழிப்போக்கன்

நானொரு வழிப்போக்கன்- ஆமாம்! நானொரு வழிப்போக்கன் வாழ்வின் நீண்ட வெளிகளை எனது பாதங்கள் அளந்து வரும் பாதையில் மாறிடும் பருவங்களால் ஒரு பக்குவம் கனிந்து வரும். பக்குவம் கனிந்து வருவதனால் ஒரு இலட்சியம் பிறந்து விடும்! இலட்சியம் பிறந்த காரணத்தால் – இனி நிச்சயம் விடிந்து விடும்! யாதும் ஊரே என்றொரு புலவன் பாடிய மொழி கேட்டேன். சாதனை யூருக்குப் போவது எப்படி? அவனிடம் வழி கேட்டேன்-! தீதும் நன்மையும் நாமே புரிவது தெரிந்தால் நலமென்றான். நீதான் ...
More...More...More...More...