Blog

/Blog

வாழ்வு வரும்

சிறுத்தைகள் திரிகிற காடென்று சிறுமான் மேயாதிருப்பதில்லை; குறுகிய கவலையில் வாழ்பவர்கள் குறிக்கோள் என்றும் தொடுவதில்லை. பூமி பரந்தது அதிலுனக்குப் பாதை இருப்பது நிச்சயமே! ஆமை வேகம் உதறிவிட்டு நீயாய் எட்டிடு இலட்சியமே! காலம் எதையும் புரட்டிவிடும் கணப்பொழுதுக்குள் நிமிர்த்திவிடும் நாளை காட்சிகள் மாறிவரும் நினைத்தவை நிஜமாய் ஆகிவிடும்! சென்றதை நினைத்துப் புலம்பாதே செல்லும் திசையில் வெளிச்சம் வரும் என்றைக்கும் உள்ளம் கலங்காதே எண்ணம் போல வாழ்வுவரும். ...

மாற்றிவிடு

குப்பைகள் உரமாய் ஆகிறபோது கற்பனை நிஜமாய் ஆகாதோ – ஒரு கைப்பிடி தானியம் எறும்புகள் சேர்க்கும் நம்மால் சேமிக்க முடியாதோ? சொந்த முயற்சியில் சிலந்திதன் வலையை செய்துகொள்வதைப் பார்த்தாயோ – நீ சிந்தும் வியர்வையில் எந்த செயலையும் எளிதாய்த் தொடலாம் கேட்டாயோ? வாழும் வாழ்க்கை நிரந்தரமல்ல வகுக்கும் செயல்களை நிலையாக்கு! தாழ்வும் உயர்வும் தானாய் வராது உனது வெற்றியை உருவாக்கு! தாண்டிச் செல்லும் நொடிகளின் முதுகில் தனிப்பெரும் வெற்றிகள் ஏற்றிவிடு மீண்டும் மீண்டும் உன்னைத் தூண்டி மாறா ...

பூமிப்பந்துடன் கொண்டாடு

பூமிப்பந்துடன் கொண்டாடு வயல்களில் முளைவிடும் பயிர்களுக்கு வான்தரும் மழைத்துளி விருதாகும்! வியர்வை விதைக்கும் உழவருக்கு விளைச்சல் முழுவதும் விருதாகும்! முயற்சியை நம்பி உழைப்பவர்க்கு முன்னேற்றங்கள் விருதாகும்! துயரங்கள் துடைத்து எழுபவர்க்கு தொடரும் இன்பங்கள் விருதாகும்! அழுத்திடும் சோம்பலை அகற்றிவிடு அடுத்தவர் சோகம் துடைத்துவிடு எழுத்தினில் பேச்சினில் கனிவுகொடு ஏங்கும் யாருக்கும் துணிவுகொடு நிகழ்த்திய வெற்றிகள் கையளவு நீதொட இலக்குகள் வானளவு கழுத்தினில் விழுகிற பதக்கம்பெறக் குனிகிற பணிவே கடலளவு! விருதுகள் எல்லாம் முன்னோட்டம் வருகிற வெற்றிக்கு வெள்ளோட்டம் ...

நெடுஞ்சாலை

வாழ்க்கை என்பது நெடுஞ்சாலை வேகத்தடைகளும் இருக்கலாம் போக்குவரத்து நெரிசலை பார்த்துப் போனால் ஜெயிக்கலாம்! பச்சைவிளக்கு தெரிகையில் பயணம் தொடர்ந்தால் நல்லது லட்சியவிளக்கு தொடும்வரை எரிபொருள் மனதில் உள்ளது! எத்தனை பயணிகள் சாலையில்! எல்லோருக்கும் அவசரம்! எத்தனை தொலைவு பாதையோ அத்தனை பொறுமை அவசியம்! எங்கே போகிறோம் என்பதை எப்படிப் போகிறோம் என்பதை உங்கள் வரைபடம் காட்டினால் உங்கள் பயணம் வெற்றிதான்! பாதை தவறிப் போகையில் பயணம் குழம்பிப் போகலாம் ஏது திசையெனத் தெரிந்தவர் எல்லாம் ஊர்சென்று சேரலாம். ...

அலறட்டும் உனது பகை

தீக்குச்சி சிறிது தீட்சண்யம் பெரிது திசைகளில் வெளிச்சமிடும்! நோக்கங்கள் சரியாய் உரசிடும் பொழுது நிச்சயம் வெற்றி வரும்! ஆக்கிடப் போகும் ஆயிரம் பணிகளின் பட்டியல் எழுதிவிடு! போக்கிய பொழுதுகள் போனால் போகட்டும் புதிதாய்ப் பிறந்துவிடு! மார்புக்கு குறியாய் விமர்சன அம்புகள் மற்றவர் செலுத்தட்டுமே! யார் சொல்லி என்ன உன் வழி உனது பயணம் நடக்கட்டுமே! ஊர் சொல்லும் வார்த்தைகள் உலவிடப் போவது உன் பலம் தெரியும் வரை! பேர்சொல்லும் விதமாய் படைத்திடு சாதனை அலறட்டும் உனது பகை! ...

வழி பிறக்கும்

கனவுகள் பருகிய கண்களுக்குக் காரிய வீரியம் வரவேண்டும்! மனதினில் மழைவிழும் தருணத்திலே முயற்சியின் விதைகள் எழவேண்டும்! காலத்தின் சுழற்சிகள் நிற்பதில்லை கடுங்குளிர் நடுவே தைபிறக்கும்! வேலைகள் தொடங்கி நடத்துகிற விபரம் இருந்தால் வழிபிறக்கும்! முன்னோர் பழமொழித் தூண்களிலே முட்டுக்கொடுத்தே நிற்காதே சொன்ன மொழிகளின் பொருளறிந்து செயலாய் மாற்ற மறக்காதே வார்த்தைகள் விதையாய் விழும்போது வாழ்க்கை முளைவிடும்; வளர்த்துவிடு; பார்த்தவை கேட்டவை உரமாகும் பூக்களை உனக்குள் மலர்த்திவிடு. ...
More...More...More...More...