ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு
மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய கவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி. — ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன. யாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் ...
காற்றினிலே கரைந்த துயர் – எம்.எஸ். பற்றி டி.எம்.கிருஷ்ணா
ஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.” சங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் தன்னிடம் “எம்.எஸ். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மோசடி” என்று சொன்னதைப் பற்றிய குறிப்புடன் இந்நூல் தொடங்குகிறது. இந்நூலின் “ஆதார சுருதி” கல்கி சதாசிவத்தின் வருகைக்குப் பின்னால் எம்.எஸ். இசையில் நேர்ந்த மாற்றங்களைக் குறிப்பதாகும். இதனை நூலாசிரியரின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், “சுதந்திரமாகப் ...
ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசமும் ஓஷோ ஆசிரமமும்
ஓஷோ மீது நிகரில்லா பக்தி கொண்ட சேவகியாய் ஓஷோ ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாய் வாழ்ந்த லஷ்மியின் வாழ்வைச் சொல்லும் நூல் THE ONLY LIFE. பெரும் அவமானங்கள், கடும் நோய், கொடும் அடக்குமுறைகள் எனஎது நேர்ந்தாலும் “இது என் குருவின் கருணை” என ஏற்றுக் கொண்ட லஷ்மி,ஓஷோ ஆசிரமம் முதன்முதலுருவான காலங்களில் அதன் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டவர். பாரதத்தின் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா ...
மரபின்மைந்தன் பதில்கள்
ஆன்மீகம் எல்லாவற்றையும் அதன் இயல்புப்படியே ஏற்கச் சொல்கிறது. உலகியல் வாழ்க்கையோ எல்லாப் போராட்டங்களிலும் வெல்லச் சொல்கிறது. இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா? – உமா, கோவை. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களைப் பொறுத்தவரை உலகியலென்பதும் ஆன்மீகம் என்பதும் வெவ்வேறில்லை. உலகியலின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆன்மீகத் தன்மையுடன் செய்கையில் இந்த இடைவெளி அழிந்துவிடும். ஒரு போராட்டமான சூழல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போராட்டமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமே தவிர எதிர்ப்புணர்வு தேவையில்லை. தனக்கு வந்துள்ளது போராட்டமான சூழல் என்பதை முதலில் ...
ஆய்வுரைத் திலகம் முனைவர் அ.அறிவொளி
ஆய்வுரைத்திலகம் என்றும் இலக்கியப் பேரொளி என்றும் போற்றப்பட்ட அறிவொளி அவர்கள் காலமானார். தமிழ் இலக்கிய உலகில் மேடைத்தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என ஒன்று இருந்தது. கி.வா.ஜகந்நாதன், திருச்சி பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த மறுமலர்ச்சிக்காலத்தில் தளகர்த்தர்களில் ஒருவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிய முற்பட்டும் அவருடைய இயல்புகள் அவரை நீண்ட காலம் பணிபுரிய விடவில்லை. வாழ்க்கையை ஒரு பரிசோதனைக்கூடமாக்கிக்கொண்டு, விதவிதமான சோதனைகளை அவர் நிகழ்த்தி வந்தார். மாட்டுப்பண்ணை வைப்பது, கீரைத் தோட்டம் போடுவது, கீரை ...
மரபின்மைந்தன் பதில்கள்
பலரும் தங்களின் தனிப்பட்ட குறிப்புகள் இணையத்தால் பறிபோகிறதென்றும் அனைவரின் அந்தரங்கத்திற்கும் ஆபத்தென்றும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கே.லோகநாதன், கோவை. ஒரு மனிதர் தன் அந்தரங்கம் என எதனை நினைக்கிறார் என்பதே கேள்விக்குரியது. இணையத்தில் நீங்கள் நுழைந்த நொடியிலிருந்தே உங்கள் நடவடிக்கைகள் பதிவாகின்றன. உங்களைப் பற்றிய அடிப்படைத் தரவுகள் அளிக்கப்படுகின்றன. இணையம் என்ற ஒன்று தோன்றும் முன்னரே உங்களைப் பற்றிய தரவுகளைப் பதியத் தான் செய்கிறீர்கள். நீங்கள் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ...