Blog

/Blog

நான்கு திசைகளும் நமதாகும்

காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும் ஆற்றின் கரையில் ஆடிய நாணல் ஆயிரம் அலைகளைக் கண்டிருக்கும் மாற்றங்கள் எல்லாம் ஏற்கிற உள்ளம் மறுபடி மறுபடி ஜெயித்திருக்கும் மீண்டும் மீண்டும் அலைகளின் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும் தூண்டில் முனைக்குத் தப்பிய மீன்தான் தொடர்ந்து நீந்தி உறவாடும் நீண்ட வாழ்வே நதியின் பயணம் நின்றால் எல்லாம் தடையாகும் மூண்டெழும் வேகம் வெளிப்படும் நேரம் மூன்று காலங்கள் ...

தட்டித் திறந்துவிடு

பொன்னில் ஒரு கதவு – உன் பாதையைத் தடுத்தாலும் தன்னை மறக்காமல் – அதைத் தட்டித் திறந்துவிடு உன்னை விடப் பெரியோர் -இங்கே உண்மை எதிர்த்தாலும் சின்னத் தயக்கமின்றி – அட சீறி எழுந்துவிடு வீணாய் வம்பெதற்கு -என விலகி யிருந்தாலும் பாணம் சீறிவந்தால் – நீ பாய்ந்து தடுத்துவிடு சண்டையில் பிரியமில்லை -என்று சமநிலை கொண்டாலும் கண்டிடும் தீமைகளை – உன் கால்களில் எற்றிவிடு கேள்விகள் கேட்காமல் – இங்கே கேடுகள் அகல்வதில்லை ஆள்பலம் எதிர்த்தாலும் ...

உன் வாழ்க்கை மாறும்

ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா? சுருளாத வலிவும் சரியான தெளிவும் சுகம்சேர்க்கும் உன்வாழ்வில் & நீ வா! சுடர்வீசும் கண்கள் சுமைதாங்கும் தோள்கள் சலியாத மனம்கொண்டு நீ வா! இருக்கின்றபோதே ஜெயிக்கின்ற வாழ்வு இதுதானே நாம்காண வேண்டும்! எதிர்ப்பின்றி எதையும் உதிர்க்கின்ற நடையும் இருந்தாலே புகழுன்னைத் தீண்டும்! கருவான கனவு நனவாகும் பொழுது காலங்கள் உன்பேரை கூறும் ...

எது காதல்?

வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும் – அதில் அறவே தொலைந்தால் அது காதல் மூழ்கித் துயரில் தொலைபவரை – சென்று மீட்கத் தெரிந்தால் அது காதல் தோழமை இன்றித் துவள்பவரைத் – தொட்டுத் தோளுடன் அணைத்தால் அது காதல் வயதில் கிளர்ச்சியில் வருவதல்ல – இந்த வாழ்வின் மலர்ச்சி அது காதல் முயலும் உறுதியில் தெரிகிறதே – அந்த முனைப்பின் மகிழ்ச்சி அது காதல் உயரும் ...

கனவுகள் உனது பிறப்புரிமை

இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் –  நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள் மனதில் ஏற்பவனே – அதை சுட்டுப் பொசுக்கத் தயக்கமென்ன? உள்ளே இருக்கும் கனவுகள்தான் – நல்ல உரம்தரும் உனது தோள்களுக்கு பள்ளிப் பருவத்து உற்சாகம் – அதப் பரிசாய்க் கொடு உன் கால்களுக்கு வெள்ளி உறைக்குள் போட்டாலும் – புகழ் வெளியே ...

கையில் விழுந்த விதை

வானம் நமக்கோர் இலக்கானால் வளரும் நம்பிக்கை விளக்காகும் நானும் நீயும்முடிவெடுத்தால் நாளைய விடியல் நமக்காகும் ஒவ்வொரு நாளும் விதைபோல உனது கைகளில் விழுகிறது எவ்விதம் விதைப்பாய் வளர்த்தெடுப்பாய் என்பதும் உன்னிடம் இருக்கிறது மனிதன் அடைகிற வெற்றிகளும் மற்றவர் கொடுத்து வருவதல்ல மனிதன் இழக்கிற வாய்ப்புகளும் மற்றவர் தடித்து மறைவதல்ல உன்னில் தொடங்கும் ஒருகனவு உன்னால்தானே நிஜமாகும் இன்னும் தயக்கம் எதற்காக எண்ணியதெல்லாம் வசமாகும். ...
More...More...More...More...