எதுவும் கைகூடும்
சுவர்கள் எழுந்த மனதுக்குள்ளே சுற்றும் காற்று நுழைவதில்லை! கவலைகள் வல்ர்ந்த இதயத்திலே கனவின் வெளிச்சம் விழுவதில்லை! எட்டுத் திசையும் திறந்திருக்கும் இதயத்தில் வெற்ர்ப் விளைகிறது! கட்டிவைக்காத கனவுகளே காரியமாய் அங்கு மலர்கிறது! தன்னைத் தீவென மாற்றுபவன் தனக்குள் மூழ்கித் திணறுகிறான்! என்றும் எங்கும் கலப்பவனே எல்லா வகையிலும் உயருகிறான்! ஆமையின் ஓடு சுமையாகும் ஆதலினால் நடை மெதுவாகும்! பூமி முழுவதும் உறவென்றால் புதுமைகள் தினமும் உருவாகும்! மூடிகள் இல்லா மனதோடு முன்னேற்றங்கள் எளிதாகும்! தேடிய எதுவும் கைகூடும் ...
தீயாய் எழுந்தால்……
உன்னில் எழுகிற கனலில் – இந்த உலகே ஒளிபெற வேண்டும் மின்னில் எழுகிற சுடராய் – உன் முயற்சிகள் மழை தர வேண்டும் தன்னில் கனல்கிற தணலால் -எட்டுத் திசைகளைத் திறந்திட வேண்டும் இன்னும் என்கிற தேடல் – உன்னை இயக்கி விசைதர வேண்டும் ஊக்கச் சிறகுகள் விரிந்தால் – உன்னை உயர்த்தத் துடிக்கும் வானம் தூக்கம் உதறி எழுந்தால் – உன் தோள்விட்டோடிடும் பாரம் ஆக்கும் காரியம் எதிலும் -அட ஆர்வம்தானே மூலம் ஏக்கம் இனியும் ...
வாழ்க்கையின் பாதை
புன்னகை வரைபடம் கைவசமிருந்தால் புலப்படும் வாழ்க்கையின் பாதை தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால் உண்மையில் அவன்தான் மேதை இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று ஏங்கி நடப்பதா வாழ்க்கை? எண்ணிய திருப்பம் ஏற்படும் விதமாய் இன்றே நடந்திடு வாழ்வை காலத்தின் புதையல் காற்றிலும் இருக்கும் கண்களில் படும்வரை தேடு தோல்வியின் கைகளில் துவண்டுவிழாதே திசைகளைத் துளைத்தே ஓடு நீலத்தை வானம் தொலைத்துவிடாது நீ உந்தன் சுயத்தினை நாடு கோலங்கள் புனைந்து மேடைகு வந்தோம் குழப்பங்கள் மறந்தே ஆடு பொன்னொரு ...
நல்ல நாள்
காற்றில் தவழ்கிற ஒருபாடல் -அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்து ஒருதேடல் – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் -அது உந்தித் தள்ளினால் நல்லநாள் போற்றிய கனவுகள் நிஜமானால் – உங்கள் பாதையில் அதுமிக நல்லநாள். முன்பின் தெரியா ஒருகுழந்தை – சிறு முறுவல் சிந்தினால் நல்லநாள் தன்னைத் தேடும் ஒரு மனிதர் – உங்கள் தோள்களைத் தொட்டால் நல்லநாள் இன்னகள் சுமக்கும் ஒருகிழவர் – அவர் இரைப்பை நிரப்பினால் நல்லநாள் ...
பாதை நீள்வது உனக்காக
வானம் உன் செயல்களைப் பார்க்கிறது – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம் ஞானம் உனைத்தொட நினைக்கிறது – இங்கே நிகழ்பவை அதற்கு வாசல்களாம் தானே நீயென நினைக்கிறது – அந்த தெய்வம் என்பதே வேதங்களாம்! உள்ளே எல்லாம் இருக்கையிலே – உன் உள்ளம் அஞ்சுவ தெதற்காக பள்ளம் மேடுகள் இருந்தாலும் -உன் பாதை நீள்வது உனக்காக அள்ளிக் கொள்ள வானமுண்டு – உன் ஆற்றலை அளந்திடு ...
செப்டம்பர்-3 சத்குரு பிறந்தநாள்
பல்லவி ———— ஒரு பார்வை….ஒரு புன்னகை உயிரையும் தருவான் சீடன் குருமேன்மை …அறியாமல் குதர்க்கம் சொல்பவன் மூடன் பலர்வாழ்வில் இருள்நீங்க ஒளியாய் வந்தவன் ஈசன்… நலம்யாவும் நமதாக தனையே தருகிற நேசன் சரணம்-1 ———— வான்விட்டு வருகிற தூயநதி பூமியை நனைக்கிற பாகீரதி ஊன்தொட்ட உயிரை நனைக்கிற குருவும் உண்மையில் உண்மையில் ஜீவநதி! பாவங்கள் கரைக்கிற வேகத்திலே கேள்விகள் தீர்க்கிற ஞானத்திலே நதியெனப் பெருகும் குருவின் திருவடி அதுதான் அதுதான் தாயின்மடி! ( ஒரு பார்வை துறைமுகம் ...