Blog

/Blog

உன் பொறுப்பு

கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு – நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை – நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு! போனால் வராது பொழுதுதான் – இதைப் பொறுப்புடன் உணர்ந்து செயல்படு! நிச்சயம் ஜெயித்திட வேண்டுமென்று சட்டம் நீட்டிட ஒருவரும் இல்லையே! உச்சம் தொடுகிற தவிப்பன்றி பிற உந்து சக்தியும் இல்லையே! மெத்தைக் கனவில் புரள்வதும் நிச்சயம் நீ செய்யும் முடிவுதான் -அதில் நெருப்பாய் ...

திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம் கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள்ௐ செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு சாயம் போனவர் வாழ்வினில் நீயே சூரியன் போல உதித்துவிடும்! சோர்ந்தவர் வாழ்வினில் சுடரொன்று கொடுத்தால் சொத்துகள் அழியப் போவதில்லை சேர்ந்தவர் நலனே நம்நலன் அலவோ தனியாய் எவரும் வாழ்வதில்லை தாழ்ந்தவர் உயர்ந்தவர் யாருமில்லை – இதில் தள்ளி நின்றிடத் தேவையில்லை வீழ்ந்தவர் எழுந்திடக் கைகொடு போதும் வாழ்வில் ...

இல்லாத உரிமை

வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று… பார்த்ததுமே! காலம் வரும்வரை காயாக காலம் கனிந்ததும் கனியாக கோலங்கள் மாற்றும் தாவரங்கள் கூடிச் சுவைத்திடும் பறவையெலாம்! தன்னை வெளிப்பட உணர்த்துதற்கு தருணம் பிறந்திடும் யாருக்கும் உன்னில் உள்ளது என்னவென்றே உணர்ந்திட நாள்வரும் ஊருக்கும்! ஆழ்மனம் கொண்ட தகுதிகள்தான் ஆசைகள் என்று வெளிப்படுமாம் தாழ்வாய் தன்னை கருதாமல் தீயாய் எழுந்தால் ஒளிவருமாம்! ஒவ்வொரு நாளும் சூரியனும் ஒவ்வொரு நேரத்தில் வருகிறது ...

கனியவைப்போம்

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டல் அதன் பின்னர் வெற்றி தொடர்கதைகள் வீசிய விதைகள் முளைக்குமென்ற விருப்பத்தின் பேர்தான் விவசாயம் ஆசைகள் எல்லாம் விதைத்துவிடு அனைத்தும் ஒருநாள் பயிராகும்! வானம் பார்க்கிற பூமியைப்போல் வாய்ப்புகள் பார்த்தே வாழ்ந்திருப்போம் தானாய் கனியா வாய்ப்புகளைத் தருணம் பார்த்துக் கனியவைப்போம்! வெற்றி நமக்கொரு விருந்தாளி வருத்தி அழைத்தால் வருகைதரும் ...

வானம் வழங்கும் பாடம்

சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்கும் வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்கும் மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்! உன்னில் திறமை உருவெடுக்கும் வரை உள்ளே பொறுமை வளர்ப்பாய் என்னவும் வலிமை என்பதைக் காட்ட ஏற்படும் தருணம்…. பொறுப்பாய் இன்னும் பொறுமை இன்னும் பொருமை என்கிற மந்திரம் ஜெபிப்பாய் மின்னும் சுடராய் முழுமை அடைந்தபின் மறைப்பவை மறைந்து ஜொலிப்பாய்! எல்லாம் தெரிந்தவர் இருப்பார் ...

நாளையென்ன? தேடு

கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு நாடியதை எட்டியபின் நாளையென்ன? தேடு! வீசுபுயல் நிலநடுக்கம் வந்துப்போகும் பூமி ஏசுதலே இல்லாமல் வாழ்ந்தவன்யார் காமி தேசமெல்லாம் புகழ்ந்தாலும் தீமைசெய்வான் ஒருவன் கூசாமல் கடமை செய்யக் கற்றவனே தலைவன்! ஆயிரமாய் தடைகள்வரும் ஆனபோதும் முயல்க காயங்களை மறந்துவிட்டு கருதியதை அடைக நோய்மனது கொண்டவரின் தொல்லைகளை மறந்து வாய்ப்புகளைத் தொடர்ந்து சென்று வெற்றிகளைப் பெறுக! ...
More...More...More...More...