Blog

/Blog

கடல்

தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால் பகிர்ந்துகொடு தனித்தனியாய் மூச்சடக்கு முத்தெடுத்தால் விலைக்குக் கொடு தனித்திருந்தால் முக்திவரும் தோள்கொடுத்தால் சக்திவரும் தனித்தனியாய் உலகமில்லை சேர்ந்திருந்தால் துயரமில்லை கடலெனவே எழுந்துவிடு கவலையெலாம் மறந்துவிடு தடைகளெல்லாம் நொறுங்கும்படி அலையலையாய் ஆற்றல்பெறு தீவுகளோ தேசமில்லை தனிமையிலே இனிமையில்லை வாழ்வதென்றே துணிந்துவிடு வெளியில்வந்து கலந்துவிடு ...

இதுநேரம்

காற்று நடக்கிற வான்வெளியில் – உன் கனவுகள் இருக்கும் பத்திரமாய் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன் நினைவில் இருக்கும் சித்திரமாய் கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள் கூடாரங்கள் கலைத்துவிடும் ஆற்றல் அரும்பி வெளிப்பட்டால் – உன் ஆதங்கங்கள் தொலைந்துவிடும் தேடல்கள் இலக்கைத் தொடுவதற்கே – ஒரு தேதி இருக்கும் நிச்சயமாய் வாடும் நிலைகள் மாறிவிட – உன் வாழ்க்கை மலரும் உற்சவமாய் கூடுகள் அமைக்கிற பறவைக்கெல்லாம் – இந்த குவலயம் முழுவதுரும் இரைகிடைக்கும் வீடெனும் ...

சுகம்

விளையும் நிலத்தில் விதைகள் சுகம் வீணையின் நரம்பில் விரல்கள் சுகம் களைகள் களைந்த வயல்கள் சுகம் கனவுகள் நிறைந்த கண்கள் சுகம் முயல்வதில் வருகிற முனைப்பு சுகம் முத்திரை பதிக்கும் உழைப்பு சுகம் தயக்கங்கள் உடைக்கும் நினைப்பு சுகம் தொடரும் பணிகளின் களைப்பு சுகம் கனிவில் நெகிழ்கிற இதயம் சுகம் காலைதோறும் உதயம் சுகம் தனிமையில் வருகிற தெளிவு சுகம் தடைகளை உடைக்கும் வலிவு சுகம் திட்டங்கள் தீட்டும் கூர்மை சுகம் தனக்கே தெரியும் நேர்மை சுகம் ...

வரைபடம்

வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஒட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன் மறுபடி கருப்பைக்கு நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம் நிரம்பும் இரைப்பைக்கு கீற்றென எழுகிற வெளிச்சத்தின் வகிடு கிழக்கே நீள்கிறது. ஊற்றெழும் அமுதம் ததும்பும் கோப்பை உள்ளே வழிகிறது பொன்னை எண்ணிப் பூமியைத் தோண்ட பூதம் வருகிறது ஜன்னல் ...

நிலைநிறுத்து

குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு குறிக்கோள் நோக்கிச் செல்ல கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு கருதிய எல்லாம் வெல்ல தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம் தத்துவம் சொல்லும் மெல்ல தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால் தெய்வம் வருமெதிர் கொள்ள பொன்னில் இழைத்த விலங்கென்றாலும் பூட்டப் படுவது வலிதான் தன்னைத் தொலைத்த பாதையில் மீண்டும் தெளிந்து நடந்தால் சரிதான் இன்னும் சரியாய் இருந்து பார்த்தால் இந்த வாழ்க்கை சுகம்தான் என்னவந்தாலும் மாறும் என்றே யாரோ சொன்னது நிஜம்தான். வேருக்குக் ...

ஊற்றுகள் உருவாகும்

வானப் பரப்பிடையே – கரு வண்ணக் கருமுகில்கள் தேனைப் பொழிகையிலே – மணி திமிறிச் சிலிர்க்கிறது ஏனோ கடும்வெய்யில் – என ஏங்கிய ஏக்கம்போய் தானாய் குழைகிறது – விதை தாங்கி மலர்கிறது நேற்றைய கோடைவலி – அதன் நினைவில் துளியுமில்லை தோற்ற வலிகளையேன் – நீ தூக்கிச் சுமக்கின்றாய்? காற்றின் திசைமாறும்- உன் காயங்கள காய்வதற்கு ஊற்றுகள் உருவாகும் – புனல் ஊறிப் பாய்வதற்கு இந்த விநாடியிலே – வாழ்க்கை என்ன கொடுக்கிறது? எந்த முடிச்சுகளை ...
More...More...More...More...