Blog

/Blog

இன்று

இன்று முளைத்தது இன்று.. இதன் கன்றாய் துளிர்விடும் நாளை…. அன்றே முடிந்தது அன்று-அதன் அச்சம் சுமப்பவன் கோழை நன்றே நிகழ்ந்தது வாழ்வு – இந்த நிலையே தொடரட்டும் நாளை என்றே தொடருக யாவும் – இந்த எண்ணம் இறைவனின் லீலை ஒவ்வொரு நிமிடமும் வைரம் – அதை உணர்பவர் தொடுவார் உயரம் செவ்விய செயல்களின் சேர்க்கை – ஒன்று சேர்த்தால் அமைவதே வாழ்க்கை கருதிடும் கனவுகள் உண்டு – அவை கைவர வேண்டும் நன்று உறுதியை நெஞ்சினில் ...

போதனை போதாது

காலம் எழுதும் குறிப்பேட்டில் – உன் கனவுகள் நிலுவையில் உள்ளன! ஆலாய் பறக்கும் மானிடனே – உன் ஆசைகள் எங்கே போயின நீலம் நுரைக்கும் ஆகாயம் – நீ நிமிரும் நாளெதிர் பார்த்திடும் வேலைகள் தொடங்கிடு வேகமாய் – உன் வெற்றிகள் அழகாய்ப் பூத்திடும்! நானா செய்வேன் என்றிருந்தால் – நீ நிற்கிற இடத்தில் நின்றிடு தானாய் வரும் பலம் தெளிந்திருந்தால் – நீ திசைகள் எட்டும் வென்றிடு! ஏதோ இதுவரை சோம்பி நின்றாய் – அட ...

வருகிற காலம்

பிரளயம் எழுந்தே அடங்கும் பிரபஞ்சம் புதிதாய்த் தொடங்கும் நரக வலிகளும் முடங்கும் வருகிற காலம் விளங்கும் தீர்ப்பின் நிறங்கள் மாறும் தீர்வை நோக்கிப் போகும் போர்கள் முடிந்து மௌனம் போதனை தேடும் இதயம் மோதலின் சுவடுகள் மறையும் மூர்க்கத் தனங்கள் குறையும் ஆதலால் நம்புக நெஞ்சே ஆதவக் கிரணம் தெரியும் தவறுகள் திருத்தும் தருணம் தலைவர்கள் திருந்தும் தருணம் அவதிகள் மெதுவாய்க் குறையும் அனைவர்க்கும் ஒருநாள் விடியும் ...

நம் பயணம்! நம் பாதை!

உடன்வருவோர் வாழ்வினிலே சிலபேர் – நல்ல உயிர்போலத் தொடர்பவர்கள் சிலபேர் கடன்போலக் கழிபவர்கள் சிலபேர் – இதில் காயங்கள் செய்பவர்கள் சிலபேர். கைக்குலுக்கிச் செல்பவர்கள் சிலபேர் – வந்து கலகலப்பாய்ர் பழகுபவர் சிலபேர் கைக்கலப்பில் பிரிபவர்கள் சிலபேர் – இதில் காலமெல்லாம் தொடர்பவர்கள் சிலபேர். மனிதர்களால் ஆனதுதான் வாழ்க்கை – ஆனால் மனிதர்கள் மட்டுமல்ல வாழ்க்கை இனியெவரோ எனும்ஏக்கம் எதற்கு? – இன்னும் எவரெவரோ வருவார்கள் நமக்கு! எல்லோரும் முக்கியம்தான், ஆனால் – இங்கே இடையினிலே சிலர் ...

கோடைக் காலச் சாரலாய்…

கனிமொழி.ஜி.யின் முந்தைய தொகுதி குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். “கோடை நகர்ந்த கதை” என்றும் அவரின் இரண்டாம் தொகுதியும் எழுதத் தூண்டுகிறது. “சிவிகை சுமப்பவனுக்கு தன் காய்ப்பேறிய தோள்களைக் கொத்தும் காகம் குறித்து புகார்களேதும் இல்லை” இந்த வரிகள், மேலக்காரிகளுக்கு சாமரம் வீசும் குறப்படும் இடைநிலை அதிகாரிகளால் குதறப்படும் கீழ்நிலை பணியாளர்களில் இருந்து, எத்தனையோ திசைகளை சுட்டும் விரல்களாய் சுழல்கின்றன. இந்தத் தொகுப்புக்குத் தலைப்புத் தந்த கவிதை, “காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு கோடை நகர்ந்த ...
குமரகுருபரன் – பறந்துபோன தாவரம்

குமரகுருபரன் – பறந்துபோன தாவரம்

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற கவிதைத் தொகுதியை குமரகுருபரன் அறிந்தே சொன்னார் போலும்! “மிக மிக நிதானமாக நாம் ஒரு வாழ்க்கையை யோசிக்க வேண்டியிருக்கிறது!.. குறிப்பேட்டின் பலபக்கங்களில் ஒற்றைப் புள்ளி கூட இருப்பதில்லை. காட்டின் ஒரு மூலையில் நாம் வாழாத வாழ்க்கை, பெருமரமென கிளைவிட்டிருக்கிறது. அதன்த் துளைகளில் சில பறவைகள் நம்மைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன. உயிரை இடம் மாற்றுவது பற்றி நமக்கு யாரேனும் போதித்தால் தேவலை” என்றும் வரிகளை, அநேகமாக அவர் தன் மரணத்திற்குப் ...
More...More...More...More...