Blog

/Blog

திருக்கடவூர்-2

வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும் மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்! வெண்ணிற வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் இதழ்களில் களைப்பையும் மீறிக் குமிழ்விட்டது புன்னகை. வானிருந்து கீழிறங்கும் விழுதென்று நீண்டு கிடந்த வாசுகியின் தலைப்பகுதியை அசுரர்கள் பற்றியிருக்க அமரர்கள் வால் பகுதியைப் பற்றியிருந்தனர். வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட வெப்ப மூச்சினில் அசுரர்களின் கரங்களில் ...

திருக்கடவூர்-1

நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகம் முகிழ்த்தன முறையே! -ஐங்குறுநூறு பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின் மூலநாதமாய், முடிவிலா நடனத்தின் முதல் சுருதியாய், கால வீணையின் அதிர்வாய் ஓங்கி ஒலித்தது ஓங்காரம். சிருஷ்டியின் உச்ச லயிப்பில் ஒன்றியிருந்த இடகலை பிங்கலை சக்திகள் சலனம் கொண்டன. சற்றே அசைந்தன. நாதத்தின் கருப்பையில் பிரபஞ்சக் கரு மெல்ல மெல்ல உருக்கொள்வதை உணர்ந்தன. ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உடல், மனம், உயிர் மூன்றும் அவற்றுக்குரிய நிலைகளில் சில தீமைகளும் ஆளாகின்றன. உடல் நோய் வாய்ப்படுகிறது. மனம் துயரடைகிறது. உயிரோ வினைகளால் பற்றப்படுகிறது. ஆத்தாள் என்பது நம் அகத்தில் இருப்பவள் – அப்த்தாள் என்பதன் மரூஉ. அபிராமவல்லி அண்டமெல்லாம் பூத்து நிற்கிறாள். அவள் புவியைக் காக்கிறாள். அவளது திருக்கோலம் கண்களை விட்டகலாத கவினுறு தோற்றம். அவளுடைய அழகிய கைகளில் மலர்க் கணைகள், கரும்பு, பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. மூன்று திருவிழிகளைக் கொண்ட அவளைத் தொழுபவர்களுக்கு இந்த ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அடுத்து சொல்லக்கூடிய பாடலையும் சேர்த்து 100 பாடல்களை நாம் சொன்னால் நமக்கு என்ன நேரும்? நூறாவது பாடலில் ஒரு கும்பாபிஷேகத்தையே நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். கும்பத்தில் தெய்வத்தை நாம் ஆவாஹனம் செய்கிறோம், அக்னி வளர்க்கிறோம், ஆகாயத்தில் இருக்கிற இறைவனை காற்று வழியாக அதிலே நிலைபெறச் செய்து இந்த பூமியிலே நிலை நிறுத்துவதற்குப் பெயர்தான் கும்பாபிஷேகம். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதோ அந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அத்தனையும் இந்தப் பிண்டத்தில் இருக்கிறது. இந்த உடலே ஒரு பிரபஞ்சம். இங்கே இருக்கிற ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உள்ளே உதிப்பாள் எப்போதும்.. கடம்ப வனமாகிய மதுரை, அங்கே இசைக்கு அரசியாக ராஐ மாதங்கியாக அம்பிகை வீற்றிருக்கிறாள். இமயமலையில் அவள் மயிலாக இருக்கிறாள். குண்டலினி ஆற்றல் நம் மரபில் பாம்பாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. குண்டலினி சீறி எழுந்தாள். அதை யார் கட்டுப்படுத்துவது? பாம்பு மயிலுக்குப் பயப்படும். நம்முடைய குண்டலினி ஆற்றலை நெறிப்படுத்துவதற்காக இமயமலையிலே அவள் மயிலாக இருக்கிறாள். இந்த உலகத்தில் அவளை வெயிலாகப் பார்க்கலாம். உதிக்கின்ற செங்கதிரல்லவா அவள். அதிகாலையிலே பொழுது புலர்கிறது என்றால் பராசக்தி தோன்றுகிறாள் என்று ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

குயிலாய் வருவாள் கூட்டுக்குள் ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் அம்பிகையைப் பணிகிறார். கையிலிருக்கும் நெருப்போடு அம்பிகையைப் பார்க்க போக முடியாது. கங்கை என்னும் இன்னொரு பெண்ணை தலையில் வைத்துக்கொண்டு காலில் விழ முடியாது. எனவே வணங்கும்போது இந்த இரண்டையும் எங்கே மறைத்தார் சிவபெருமான் என்று கேட்கிறார் பட்டர். இப்படி யாராவது தூண்டிவிட்டால்தான் விசாரணைக்கமிஷன் அமைப்பார்கள். அபிராமி பட்டர் அம்பிகையைத் தூண்டி விடுகிறார். தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்கிறபோது ஒரு யாகம் செய்தார்கள். அந்த நெருப்பை தன்னுடைய கைகளிலே ...
More...More...More...More...