Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தனங்களெல்லாம் தருவாள்! அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும் அவையெல்லாம் பயனில்லாமல் குன்றிவிடும். அவர்கள் பிச்சை எடுக்க நேரும் என்கிறார் அபிராமி பட்டர். சிலருக்கு வறுமையிருக்கிறதென்றால் அவன் தவம் செய்யவில்லை. அதுதான் காரணம் என்கிறார் திருவள்ளுவர். “இலர் பலர் ஆகிய காரணம் நோற்றார் சிலர் பலர் நோவா தவர்” ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தன்னை எவ்வளவு தூரம் தாழ்த்திக்கொண்டு அம்பிகையின் திருவடிகளிலே விண்ணப்பிக்கிறார் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த அடையாளம். அபிராமியைப் பார்த்து பட்டர் கூறுகிறார், “தங்க மலையாகிய மேருவை சிவபெருமான் வில்லாக வளைத்துக்கொண்டு சென்றாலும் உடனிருப்பவள் நீ. உன் திருவடிகளின் துணையில்லாமல் எந்தத் துணையும் இல்லாத மிகச்சிறியவன் நான். உன்னைப் பற்றி கர்ம வினைகளின் பிடியில் உள்ள நான் எழுதிய பாடல் மிகவும் தாழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும்கூட உன் திரு நாமங்கள் இந்தப்பாடலில், இருப்பதால் இதனை நீ ஏற்கலாம். தவறில்லை” ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இறக்கும் முன்பா எரிப்பது? சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த லோகம் பார்க்க, வானம் பார்க்க, மேலுலகம் பார்க்க எரித்தார். சர்வ லோகங்களின் சாட்சியாக சம்ஹாரம் நடந்தது. இதில் ஒரு சிறிய வேடிக்கை செய்கிறார் அபிராமி பட்டர். தவமே வடிவாகிய பெருமான் மன்மதனை தகனம் செய்தார். பொதுவாக ஒரு ஆள் செத்த பிறகுதான் தகனம் செய்வார்கள். இவர் அம்பு போட வந்தபோதே எரித்துவிட்டார். அங்கத்தை எரித்தார்; அவன் அரூபமாகப் போனான். “தகனம் முன்செய்த தவப்பெருமான்” என்கிறார் அபிராமி பட்டர். ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தெய்வங்களின் தலைவி! கால்நடைகளைப் பிணைப்பதற்கு மரக் கட்டைகளை தறி செய்து தரையில் அடித்து வைப்பார்கள். அதில் மாடுகளைக் கட்டி வைப்பார்கள். அந்தத் தறியைக் கொண்டு போய் மலையில் வைத்து அடித்தால் இறங்குமா? மரக்கட்டை மலைக்குள் இறங்காது. ஒரு நல்ல பாதையை வீணான ஆட்களுக்குச் சொல்வது என்பது மலையிலே போய் இந்தத் தறியை அடிப்பதுபோல் என்கிறார் பட்டர். பசுக்களை பிணைக்ககூடிய நடு தறியை சிவனாக வழிபடுவது வழக்கம். நடு தறி அப்பர் என்றே பெருமான் இருக்கிறார். இந்த உயிராகிய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

நினைவிலே நிறுத்து! ஒவ்வொருவருக்கும் மேனியில் பதியும் சில தழும்புகள் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிற அடையாளங்களாக இருக்கும். மலேசியாவில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் தேர்ந்த இலக்கியவாதி, அன்புச் சகோதரர் டத்தோ.எம்.சரவணன் தன் கன்னங்களில் இருக்கும் தழும்புகளைக் காட்டி,”இவை அரசியல் தழும்பல்ல. ஆன்மீகத் தழும்பு” என்று மகிழ்ச்சியுடன் சொல்வார். பத்துமலை முருகன் கோவிலுக்கு கன்னங்களில் வேல்குத்தி காவடி எடுத்ததில் ஏற்பட்ட தழும்புகளையே அப்படிக் கூறிகிறார். சிவபெருமானின் பக்தனான இராவணன் வீரத்தில் தலைசிறந்தவன். அவன் வீழ்ந்து கிடந்த போது ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

சொன்னதைச் செய்பவள் மலர் என்றாலே தாமரை. மாமலர் என்றால் பெரிய தாமரை. அதுவும் பனி படர்ந்திருக்கிறது. பனி பொருந்திய குளிர்ந்த திருவடித்தாமரைகளை வைக்க அம்பிகைக்கு எவ்வளவோ இடங்கள் உண்டு. அவள் திருவடிகளை தன் தலைமேல் தாங்குவதற்கு திருமால் தவமிருக்கிறார். சிவபெருமான் காத்திருக்கிறார். நான்கு வேதங்களும் திருவடிகள் பதியாதா என்று ஏங்கிப்போய் பார்க்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி நாற்ற மெடுக்கிற என் நாய்த் தலையின் மேல் உன் திருவடிகளை வைக்கிறாயே. அம்மா, நீ எவ்வளவு பெரிய கருணைக்கரசி என்று பட்டர் ...
More...More...More...More...