அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தாமரைக்காடு அம்பிகையை தாமரைத் தோட்டமாக தரிசிக்கிற பாடல் இது. அருணம் என்றால் சூரியன், சூரியனைப் பார்த்து மலரக்கூடியது தாமரை. அந்தத் தாமரையிலும் நம் சித்தமாகிய தாமரையிலும் அவள் அமர்ந்திருக்கிறாள். அம்பிகையினுடைய தன பாரங்கள் தாமரை மொக்குகளைப் போல் இருக்கின்றன. அவளுடைய கண்களும் தாமரைப் பூக்களாக இருக்கின்றது. முகமும் தாமரைப் பூவாக இருக்கின்றன. கைகளும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பாதங்களும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பேரழகின் திருவடிவை நீங்கள் தவிர்க்கவே முடியாது. இராமன் கணை பட்டு வாலி விழுந்து ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பொய்யும் மெய்யும் பாடவோ? என்றுமே மிகவும் உயர்ந்த விஷயங்களை பார்த்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்களுக்கு சராசரி விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் போகும். அம்பிகை எப்பேர்ப்பட்டவள் என்கிற அற்புதத்தில் அபிராமி பட்டரின் மனம் லயிக்கிறது. இரண்டே இரண்டு நாழி நெல் கொடுக்கிறார், சிவபெருமான். இதை வைத்துக் கொண்டு உயிர்களைக் காப்பாற்று என்று கொடுக்கிறார். அதை வைத்துக் கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்கிறாள். தாய்மார்களிடம் இந்தக் குணம் இருக்கும். கணவர் எவ்வளவு குறைவாக சம்பாதித்தாலும் அதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவது ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அவளை அறிந்த இருவர் சக்தி தத்துவம் முதலில் எல்லா சக்திகளின் விஸ்தீரணங்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு பெரும் அரும்பாக இருந்தது. அது மடல் விரிந்தபோது எப்படி அரும்பு விரிந்த மாத்திரத்திலே வாசனை எல்லாப் பக்கமும் பரவுகிறதோ அதுபோல் இந்தப் பிரபஞ்சம் என்கிற அற்புதம் நிகழ்ந்தது. தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த முழுப் பிரபஞ்சத்தை தன் மலர்ச்சியினாலே அம்பிகை வெளிப்படுத்துகிறாள். ஒரு கருவிற்குள் குழந்தை இருக்கிறது. நீங்கள் ஸ்கேன் செய்து பார்த்தால் ஓர் உருவம் மாதிரி தெரிகிறது. ஏதும் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
அவளுக்கு ஆவதென்ன? ஆயிரம் மின்னல்கள் கூடி ஒரு திருமேனி கொண்டது போல் தோன்கிறாள் அபிராமி. நம் அகம் மகிழும்படியான ஆனந்தவல்லி அவர் எனும் பொருள்பட, “மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குன்றது தன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி” என்கிறார் அபிராமி பட்டர். அவனை நாம் வணங்குவதால் ஏதும் பயனுண்டா என்ற கேள்விக்கு அபிராமி பட்டர் இந்தப் பாடலில் பதில் சொல்கிறார். விரலில் மோதிரம் போடுகிறோம். நம் விரலில் இருப்பதால் அந்த மோதிரத்திற்கு ஏதாவது பெருமை உண்டா? யார் விரல்களில் மோதிரம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உலகத்திலேயே ரொம்பக் கொடுமை என்ன வென்றால் தனக்கு ஒருவன் உதவமாட்டான் என்று தெரிந்தும் முயன்று பார்ப்போமே என்று போய் உதவி கேட்பதுதான் பெரிய கொடுமை. தான் வறுமை நிலையில் இருப்பதை வாய்திறந்து கேட்பது கொடுமை. பிச்சைக்காரனுக்குக்கூட வீட்டிலிருக்கும் பழையதைப் போட்டு விடுவார்கள். கடன்காரனுக்கு நாளைக்கு வா என்று சொல்லுவார்கள். கடன் கேட்டு வருபவனக்கும், பிச்சை கேட்டு வருபவனுக்கும் அதுதான் வித்தியாசம். அந்தக் காலத்தில் நிறையப் புலவர்களுக்கு இது போல்போய் பாட்டுப் பாடுவதுதான் வேலை. வீடு வீடாகப் போய் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
இதயத்தில் எழுதிப்பார் எது தியானமென்று அபிராமி பட்டரைக் கேட்டால் அவர் நான் ஒரு தோற்றத்தை வரிக்கிறேன். அதை நீ மனதில் பதித்துகொள் என்கிறார். “இந்தத் தோற்றம் கோவில் கருவறையில் இருக்கிறது. அந்த அம்பிகைக்கு நல்ல சிகப்புப்பட்டு சார்த்தியிருக்கிறார்கள். அவளுடைய தன பாரங்களுக்கு நடுவில் பெரிய முத்து மாலையை அவள் அணிந்திருக்கிறாள். கருகருவென்று அலை போன்ற அவளுடைய கூந்தல், மூன்று கண்கள், இந்தத் தோற்றத்தை நீ மனதில் வைத்துக்கொண்டு ஓர் ஓரமாக அபிராமி அபிராமி என்று உட்கார்ந்திருந்தால் இதைவிடப் ...