Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஓர் ஆசிரமத்தின் பீடாதிபதியுடன் மருதமலை திருக்குடமுழுக்கின்போது பேசிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு திருக்கடையூர் தானே என்று கேட்டவர், “இன்று நான் ஒரு பீடாதிபதியாக இருக்கிறேனென்றால் அதற்கு அந்தாதியில் இருக்கக்கூடிய பாடல் காரணம்” என்றார். அந்தப்பாடல் இந்தப்பாடல்தான். வையம் துரகம் மதகரிமாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த ஐயன் திருமனை யாள்அடித்தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குளவாகிய சின்னங்களே. ஒருவர் இந்தப் பிறவியில் செல்வவளம் மிகுந்தவராக இருந்தால் இந்தப் பிறவியிலோ கடந்த பிறவியிலோ அபிராமி மீது பக்தி செலுத்தியவராக இருந்திருக்க ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை தங்கள் கோட்டைக்கான காவலே நிலையான காவல் என்று நினைத்து அருளாகிய காவலை மறந்தன. அசுரர்கள் மேல் சினந்தார் சிவ பெருமான். அவர் சிரித்ததுமே முப்புரங்கள் எரிந்தன. அவரும் திருமாலும் சரணடைந்த திருவடிகளுக்கு உரியவளாகிய பராசக்தியை சரணடைந்தால் இந்த உலகத்தில் மரணம் பிறவி இரண்டுமே கிடையாது என்கிறார் அபிராமி பட்டர். பிறப்பு இறப்பு என்பார்கள் அதை தமக்கு சரியான வரிசையில் சொன்னவர் அபிராமி பட்டர்தான். மரணம் பிறவி என்கிறார். யாருக்குப் பிறவி உண்டு. ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எத்தனை எத்தனை நாமங்கள் மூன்று பெரும் தேவியர்கள் இருக்கிறார்கள் அந்த மூவருக்கும் நாயகியாக இருப்பவள் பராசக்தி. நான்முகனின் நாயகியாகிய கலை வாணியின் ஆன்ம சக்தியாக அவள் இயங்குகிறாள். திருமாலினுடைய மார்பிலே எழுந்தருளியிருக்கிற திருமகளுடைய சக்தியாகவும் பராசக்திதான் விளங்குகிறாள். நமக்கு வானுலகைத் தந்துவிட்டு அவள் போய் இருக்கிற இடம் சதுர்முகமும், பைந்தேன் பரிமளயாகம் என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறார். இந்த மூன்று அம்சங்களும் அவளுடைய ஆட்சி. அந்த நாயகியே நான்முகியாகவும் நாராயணியாகவும் உள்ளாள். தாமரை போன்ற திருக்கரங்களில் மலர்கள் கொண்டிருக்கிறாள். ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இசை வடிவாய் நின்ற நாயகி ஒரு பெரிய மருத்துவ உண்மையை அபிராமி பட்டர் இந்தப் பாடலிலே சொல்கிறார். தந்தையின் உடலில் இரண்டு மாதம் ஒரு துளியாக இருக்கக்கூடிய உயிர் சக்தி தாயினுடைய கருவறைக்குள் போகிறது. அது தாது சக்தி. அதற்குப்பிறகு உடல் உருவாகிறது. உடம்பு உருவாகி குறிப்பிட்ட சில வாரங்களுக்கு பிறகு உயிர் அதற்குரிய இடத்திலே வந்து சேர்கிறது. அந்த உயிரைக் கொண்டுவந்து அந்த உடலிலே பொருத்துகிற அற்புதத்தைச் செய்கிறவள் பராசக்தி. நாம் ஒரு வீடு மாற்றிப் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

திருவடி வைக்க இடம் கொடுங்கள் அம்பிகை யார் தெரியுமா? ஒளி வீசக் கூடிய நிலாவை தன்னுடைய சடை முடியில் அணிந்திருக்கிற, பவளக்குன்று போல் தோன்றுகிற சிவபெருமானின் திருமேனியிலே படருகின்ற பச்சைக்கொடி, மணம் பொருந்திய கொடி. அம்பிகையினுடைய திருமேனியிலே குங்கும வாசனை வருகிறது என்று முதல் பாடலில் சொன்னார். அந்தக் குங்குமத்தின் நறுமணம் கமழக்கூடிய பசுங்கொடி போல் அம்பிகை இருக்கிறாள். அந்த அம்பிகையை மனதில் பதித்துக் கொள் என்கிறார் பட்டர். மனிதனுடைய இயல்பு அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எங்கும் இருப்பவள் அவளே! இருத்தல் என்கிற நிலையைத் தாண்டி வாழுதல் என்ற நிலைக்கு நாம் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு மார்கம் வேண்டும். வெறும் இருப்பை, வெறும் பிறப்பை அர்த்தமிக்க, ஆனந்தமிக்க வாழ்வாக மாற்றிக் கொடுப்பவள் அம்பிகை. எனவே அவளுடைய திருவடிகளை வணங்குவது என்ற நியமத்தை மேற்கொண்டதன் மூலமாக நாம் வாழத் தொடங்குகிறோம். பள்ளிக்கூடத்தில் ஒரு பிள்ளையை சேர்த்தால் அது வீட்டிற்கு வந்து ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு நமக்கெல்லாம் பாடம் நடத்தத் தொடங்கும். ஓர் ஆசிரியர் உட்கார்ந்து போதிப்பதையும், ...
More...More...More...More...