Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வெறுக்கவும் செய்வாளோ? ஒருவரை ஆட்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்துக்கொண்டே இருப்பாள் அம்பிகை. ராமகிருஷ்ணரிடத்தில் வந்தவர்களிலேயே மிகவும் முரட்டுத்தனமாக எதிர்கேள்விகள் கேட்டு நடந்து கொண்டவர் நரேந்திரர். ஆனால் எல்லோரை விடவும் நரேந்திரர்மேல் தனி அக்கறையும், அன்பும் காட்டி அவர் கேட்கிற எல்லாக் கேள்விகளையும் பொறுத்துப் போனார் பரமஹம்சர். சீடர்கள் யாரும் கேட்கத் துணியாத கேள்விகளையெல்லாம் நரேந்திரர் கேட்டார்.”உள்ளபடியே நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். ஒரு குருவைப் பார்த்து இப்படிக் கேட்டால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

கண்டு செய்வது சரியா? தவறா? தெய்வ மார்க்கத்திலே ஈடுபடுகிறபோது சிலருக்கு உயர்ந்த ஞானநிலை சித்திக்கும். அந்தப் பிறவி எடுக்கும்போது அந்த விழிப்பு தானாகவே உள்ளே தோன்றும். தோன்கிற போது அவர்கள் தன்போக்கிலே திரிந்து கொண்டிருப்பார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். இன்றைக்கு வகை தொகையில்லாமல் திரிபவர்களுக்கெல்லாம் அந்த வார்த்தையைச் சொல்கிறோம். ஒரு சித்தன் எந்தப் போக்கிலே போகிறானோ அதுதான் சிவனுடைய போக்கு. அவனுக்கு நியமங்கள் கிடையாது. வழிமுறைகள் கிடையாது. தவங்கள் கிடையாது. சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலையில் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

சிவபெருமானின் செம்பாகத்தில் இருப்பவள் என்று அம்பிகையைச் சொன்னாலும் அம்பிகை சிவபெருமானுக்கு அன்னையாகவும் இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர். தத்துவ அடிப்படையில் சக்திதான் சிவத்தை ஈனும் என்ற சிவஞானசித்தியார் குறித்து ஏற்கெனவே சிந்தித்தோம். காந்தியடிகள் ஒரு நிகழ்ச்சிக்கு தன் மனைவியுடன் சென்றார். வரவேற்புரை நிகழ்த்தியவர் காந்தியடிகள் தன் மனைவியுடன் வந்திருக்கிறார் என்று சொல்வதற்குப் பதிலாக தன் தாயுடன் வந்திருக்கிறார் என்று சொல்லி விட்டார். காந்தியடிகள் பேசும்போது,”வரவேற்புரையாளர் தன்னையும் அறியாமல் ஓர் உண்மையை சொல்லியிருக்கிறார். கஸ்தூரிபா பலநேரங்களில் எனக்கு அன்னையாகவும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இருப்பதை உணர்த்துவாள் அம்பிகையின் திருவுருவை படிப்பவர் மனங்களில் பதிக்கும் விதமாக அந்தாதியின் இந்தப் பகுதி அமைகிறது. வேதங்களே சிலம்பாக ஒலிக்கும் திருவடிகளைக் கொண்டவள். கைகளில் ஐந்து மலர்க்கணைகள் கொண்டவள். இனிய சொற்களைச் சொல்லும் திரிபுரசுந்தரி செவ்வண்ணத் திருமேனி கொண்டவள். தீமை செய்த அரக்கர்கள் அஞ்சும் விதமாக கைகளில் மேருவை வில்லாக ஏந்தும் தழல் வண்ணராகிய சிவபெருமானின் செம்பாகத்தில் குடி கொண்டிருப்பவள் என்பது இந்தப் பாடல் தருகிற வர்ணனை. வேதங்களே அவளுக்கு சிலம்பு. சில இடங்களில் குறிப்பாக ஸ்ரீ ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. இந்த இயல்பு கொண்ட நாயகியின் இடை பாம்பின் படம்போல் இருக்கிறது. குளிர்ந்த மொழிகளைப் பேசுகின்ற அபிராமியின் திருவடிகளில் வேதங்களே சிலம்புகளாகத் தவழ்கின்றன. இந்தப் பாடலும் அம்பிகையின் திருவுருவை மனதில் பிரதிஷ்டை செய்யக் கூடியதாகும். இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கைமலைகொண்டு இறைவர்வலிய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

நமக்காகவே வருவாள் எளிய ஒர் உயிருக்காக இறைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அபரிமிதமானவை. விடுதலைக்கு வழிதெரியாமல் ஒர் உயிர் தத்தளிக்கும்போது உரிய சூழலை ஏற்படுத்தி திருவடி தீட்சையும் தந்து ஆன்மிகப் பாதையில் உறுதியுடன் நடையிடச் செய்தால் அதற்கு நாம் எவ்வள்வு புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்போது மலர்ந்த குவளை மலர்கள் போன்ற கண்களையுடைய இறைவியும் சிவந்த நிறமுள்ள அவளின் கணவரும் ஒன்று சேர்ந்து நமக்காக இங்கே வந்த தன் அடியவர்கள் திருக்கூட்டத்துடன் இருக்கச் செய்து நம் தலையின் ...
More...More...More...More...