Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பேதைமனம் போடும் பொய்க்கூத்துகள் பட்டியலில் அடங்காது. அகப்பேயின் ஆட்டம் அடங்கி அம்ப்பிகையின் திருவடிமேல் நாட்டம் பிறக்கிற வரையில் அவள் அருகிலும் வராமல்,அகன்றும் விடாமல் சற்று தள்ளியே நிற்கிறாள். அவள் தள்ளி நிற்பதெல்லாம் பேதைமை அகன்று அவளுடைய பொன்னடிகள் மேல் அன்பு பிறந்ததும் அருகில் வந்து அருள்செய்யத்தான். திருநுதலில் விழிகொண்ட அந்தத் தேவியை விண்ணவர்கள் யாவரும் தேடிவந்து பணியக் காத்திருக்கிறார்கள். அவளோ நம் பேதைமை அகல்வதற்காக சற்றுத் தொலைவில் காத்திருக்கிறாள்.அவளுடைய திருவடிகளில் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க ஒரு நாத்திகர் வந்தார். கடவுள் இல்லை என்னும் கருத்தை நிறுவ ஆணித்தரமான வாதங்களை வைத்தார். அவர் வைத்த வாதங்களை மிகுந்த கவனமுடன் கேட்ட பரமஹம்சர்,’அடடா! எவ்வளவு அழகாக வாதிடுகிறீர்கள்! இந்த வாதங்களையெல்லாம் கேட்கிற போது கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் நான் என்ன செய்வேன்! கடவுள் உண்டு என்பது எனக்குத் தெரியுமே! என்ன செய்வேன்!” என்றாராம். கடவுள் உண்டு என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களுக்கு ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அம்பிகையின் திருவுருவை நம் சிந்தையில் உயிரோவியமாகத் தீட்டி அந்த மரகதத் திருமேனியை நம் மனதில் பிரதிஷ்டை செய்யும் அற்புதத்தை படிப்படியாய் நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். பவளக்கொடி போன்ற திருமேனி. அதில் பழுத்த கனிபோல் அம்பிகையின் செவ்விதழ்கள்.பனிபடர்ந்த ஒளிமுறுவல் அந்தச் செவ்விதழ்களில் நடமிடுகிறது. திருமுலைகளின் சுமைதாங்காத இடைகளோ சிவபெருமானை வீழ்த்திய வல்லமை கொண்டவை. அவளுடைய திருவடிகளைப் பணிந்தால் தேவர்கள் உலகமே உங்கள் ஆளுகைக்கு வந்துவிடும் என்கிறார் அபிராமிபட்டர். பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அம்பிகையின் திருவுருவை மனத்தில் குறித்து அதைச் சிந்திப்பதே உயர்ந்த தியானம் என்பார் அபிராமி பட்டர்.அதன் முதல் படிநிலையாக அம்பிகையின் திருக்கரங்களில் கரும்பும் தாமரையும் இருப்பதை முதல்காட்சியாகக் காட்டுகிறார். அம்பிகையின் தாமரைத் திருமேனியில் வெண்முத்து மாலையும் இடையில் பலமணிகள் கொண்ட சங்கிலியும் கோர்க்கப்பட்டிருப்பதை அடுத்த காட்சியாகக் காட்டுகிறார். அம்பிகைக்குத் தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்த பெருமானோ திசைகளை மட்டுமே ஆடையாக அணியும் திகம்பரன் என்னும் அழகியமுரணும் இந்தப் பாடலில் இடம்பெறுகிறது. கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உலக வாழ்வின் இன்பங்களுக்குப் பொருளே அடிப்படை. அதுவே ஆதாரம்.ஆனால் அதுதான் எல்லாமுமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.பொருளின் பெருமை பேசும் திருக்குறள் ஒன்று. “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.” இதன் பொருள் என்ன? பொருட்படுத்தத்தக்க தகுதிகள் ஏதுமில்லாதவர்களைக் கூட பொருட்படுத்தத் தக்கவர்களாக மாற்றும்பொருட்செல்வத்தை விடவும் பெருமை வாய்ந்தது வேறேதுமில்லை. திருவள்ளுவர் இப்படிச் சொல்வாரா? “பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள” என்று சொன்னவரல்லவா அவர்? அப்படியானால் இந்தக்குறளை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?எனக்குத் தோன்றுவது ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வானவர்களுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் மண்ணில் உள்ள மனிதர்களுக்கு அபிராமியால் அருளப்பட்டிருப்பதை சொல்லிக் கொள்வதில் அபிராமி பட்டருக்கு அலாதியான ஆனந்தம். பிறைநிலா நிலவின் பிளவு. அந்தப் பிறைநிலாவின் வாசன் வீசும் திருவடிகள் அபிராமியின் திருவடிகள் என்கிறார். அப்படியானால் பிறைநிலவு அம்பிகையின் திருவடிகளில் பதிந்திருக்க வேண்டும். அவ்வாறெனில்,தன் தலையில் நிலவை சூடியிருக்கும் ஒருவர் அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கும் போது அந்த நிலவின் வாசனை அன்னையின் திருவடிகளில் பதிந்திருக்கும். ஒருமுறை விழுந்து வணங்கினால் வாசனை படியுமா என்ன? அடிக்கடி விழுந்து ...
More...More...More...More...