அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
உலக வாழ்வில் சில உயரங்களைத் தொடும் சாதனையாளர்களைக் கேட்டால்,சதாசர்வ காலமும் தங்கள் இலக்கினையே இதயத்தில் குறித்து அதிலேயே கவனம் குவித்து முனைப்புடன் முயற்சித்ததாகச் சொல்கிறார்கள். உள்நிலை அனுபவத்தின் உச்சம் தொடும் ஆன்மீக சாதனையாளர்களோ அதனினும் பலமடங்கு தீவிரமாய் அந்த கவனக்குவிப்பில் ஈடுபடுவார்கள்.அவர்களை உபாசகர்கள் என்றழைப்பதும் அதனால்தான். ஒரே சிந்தனையில் மனதைக் குவிப்பதும் ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் உறவை வளர்ப்பதும் ஆத்ம சாதனையின் அதிமுக்கிய அம்சங்கள். “கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாது; அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன்;” என்கிறார். எல்லாச் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
சராசரி குடும்ப வாழ்வில் கூட,பெண்கள் வகிக்கும் பொறுப்புகளின் நிலைமாற்றம் பிரமிக்கத்தக்கது. ஒருபுறம் பார்த்தால் அவள் கணவனைச் சார்ந்திருப்பவள் போல் தென்படுகிறாள். இன்னொருபுறம் பார்த்தால் கணவனைத் தாங்கும் ஆதாரசக்தியாகவும் இருக்கிறாள். கணவனைப் பற்றிப் படரும் கொடியும் அவளே.குடும்பம் என்னும் கொடியைத் தாங்கும் கொம்பும் அவளே. இல்லத்தரசிகளுக்கே இது பொருந்துமென்றால் பதினான்கு லோகங்களைப் பராமரிக்கும் இருப்பதில் ஆச்சர்யமென்ன? “கொடியே! இளவஞ்சிக் கொம்பே!” என்கிறார் அபிராமிபட்டர். ஆன்மீகத்தில் இருக்கும் வசதியே சில நேரங்களில் தகுதிக் குறைவும் தகுதியாகி விடுவதுதான்.ஒரு மாணவர் எவ்வளவுதான் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பெண்களைப் பொறுத்தவரை அழகின் அடையாளங்கள் மட்டுமின்றி அசைவின் அடையாளங்களும் முக்கியம். சலங்கையொலி வளையலொலி ஆகிய இரண்டுமே இயங்கிக் கொண்டேயிருக்கும் பெண்களை நமக்கு அறிமுகம் செய்யும்.அந்த அணிகலன்கள் அழகையும் உணர்த்தும். செயலையும் உணர்த்தும். அங்குமிங்கும் பரபரவென்று நடமாடும் பெண்களின் சலங்கையொலி துரித கதியில் கலகலக்கும்.அதேபோல அவர்கள் ஏதேனும் வேலை பார்த்துக் கொண்டேயிருந்தால் கைவளையல் சலசலக்கும். இறைவன் அளந்த இருநாழி நெல் கொண்டு உலகத்திற்கே படியளக்கும் புவனமுழுதுடையாள், மங்கலத்தின் திருவுருவாகத் திகழ்கிறாள். மலையான் மகளாகப் பிறந்ததால் மலையரசியும் அவளே. செங்கலசம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தெளிவில் விளைகிற குழப்பம்போல் சுகமில்லை. சிலருக்கு சில விஷயங்களில் ஏற்படும் தெளிவு மிகத்துல்லியமான குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சோலைராஜ் என்ற என் நண்பரொருவர் அபுதாபியில் விளம்பரத்துறையில் இருக்கிறார்.அவருடைய பாட்டனார் வர்மக்கலைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அந்தக் கலையில் மகாநிபுண்ர். ஒருநாள் தன்னுடைய வயல்வரப்பில் நடந்து போனபோது குறுக்கே ஒரு மாடு படுத்திரிந்தது. அதனை ஒரு தட்டுத் தட்டி விரட்டலாம் என்று குனிந்தார். எந்த இடத்தில் தட்டினால் என்ன விளைவு ஏற்படும் என்று மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்த ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
திருமந்திரம் என்ற மாத்திரத்தில் பெரும்பாலானவர்களுக்கும் தெரிந்தபாடல்களில் ஒன்று மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல்பூதம் எங்கும் அபிராமியின் அருட்கோலத்தைக் காணுகிற பேரனுபவம் வாய்த்ததில் அபிராமி பட்டருக்கு அளவிட முடியாத ஆனந்தம். ஞானத்தில் வருகிற போதையின் அழகே அதிலிருக்கும் மிதமிஞ்சிய தெளிவுதான்.வேறுவகை மயக்கங்களில் வருகிற போதையில் தெளிவின் சுவடே இருக்காது. சீதை குறித்துக் கேள்விப்பட்டதில் கூட போதையேறி சீதையின் உருவெளித் தோற்றம் இராவணனுக்குத் தெரிந்தது.ஆனால் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
பலருடைய வீடுகளிலும் திருமணக் கோலத்தில் தம்பதிகளின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த மங்கலமான தோற்றம் பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியை உண்டாக்கும்.அபிராமி பட்டரோ தன்னுடைய இதயமாகிய சுவரில் அம்பிகையும் சிவபெருமானும் திருமணத் திருக்கோலத்தில் காட்சிதரும் தோற்றத்தை நிரந்தரமாகப் பதித்து வைத்திருக்கிறார் தன் அடியவர்களின் உயிரைக் குறிவைத்து காலன் வந்தால் ஆட்கொண்ட திருப்பாதஹ்த்டை முன்வைத்து அம்பிகை அப்பனுடன் முன்தோன்றி எமபயம் விலக்கி முக்தியைக் கொடுத்தருள்வாளாம். உரிய காலத்தில்ஆட்கொள்ள வசதியாக முக்திக்கான தகுதியையும் முன்கூட்டியே அம்பிகை தந்தும் வைத்திருக்கிறாளாம். முக்திக்கான ...