அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
காண அரிதான பேரழகும் ஒருவகை அதிசயம்தான். வாஞ்சையும் வாத்சல்யமும் பொங்கும் திருவுருவும் அதிசயம்தான். அம்பிகை அத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான் “கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது. “அதிசயமான வடிவுடையாள்”என்று ஆனந்திக்கிறார் அபிராமி பட்டர். “அரவிந்தம் எல்லாம் துதிசெய ஆனன சுந்தரவல்லி”. மலர்களிலேயே மிக அழகானது தாமரை.அந்தத் தாமரை மலர்களில் செந்தாமரைகளின் தலைவி திருமகள். வெண்தாமரைகளின் தலைவி கலைமகள். அபிராமியை அலைமகளாம் திருமகளும் கலைமகளும் துதிப்பதாலேயே அம்பிகையின் அழகில் மயங்கி தாமரைகள் எல்லாம்துதி செய்யும் பேரழகி ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஒலியும் அவளே ஒளியும் அவளே அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச் சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது நமக்காகப் பேசுகிறது. ஒரு குழந்தையிடம் அதன் தாய் பேசுவதைப்பாருங்கள்…! அந்தத் தாய் எவ்வளவு தேர்ந்த அறிஞராக இருந்தாலும் குழந்தையின் மழலை உச்சரிப்பைத்தான் தன் குரலில் பேசுவாள். சரியான சொற்களைத் தேர்ந்த உச்சரிப்பில் சொல்ல அவளுக்குத் தெரியும்.ஆனால் அன்னை தன்னைப்போலவே பேசுகையில் குழந்தை ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஒரு குழந்தையிடம் பத்து இலட்சம் ரூபாய்களைக் காட்டி “இதை வைத்துக் கொண்டு என்ன செய்வே?”என்று கேளுங்கள்.”நெறய்ய ஐஸ்க்ரீம் வாங்குவேன்” என்று சொல்லும்.இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உலகத்திலேயே ஐஸ்க்ரீம்தான் உயர்ந்தது என்கிற அதன் அபிப்பிராயம். இரண்டாவது பத்து இலட்சம் ரூபாய்கள் என்றால் எவ்வளவு உயர்ந்தது என்று குழந்தைக்குத் தெரியாது. அம்பிகையின் பேரருள் எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியாத மனிதர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.தேவர்களுக்கே உரிமையான நிலையான பல இன்பங்களையும் அதனினும் மேம்பட்டதான முக்தியையுமே தரவல்லது அம்பிகையின் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள்.அந்தப் பெரிய மனிதருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம், கடைகள் இருக்கலாம்.அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும் நடத்திக் கொண்டிருக்கலாம். அவருடைய தொழிற்சாலைகளில் வணிக வாய்ப்பு தேடி சிலர் சந்திக்க வருவார்கள்.அவருடைய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று வருவார்கள்.அவரோ நாளின் பெரும்பகுதியை அனாதைக்குழந்தைகளுக்கான விடுதியில்தான் கழிப்பது வழக்கம்.அங்கே அவருக்கு செலவுதான்.மற்ற இடங்கள் வருமானம் தருகிற இடங்கள்.அவற்றையெல்லாம் ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
தென்காசியில் ரசிகமணி டி.கே.சி.விழா.அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன்,திரு.தீப. குற்றாலலிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம்.ராஜாஜி,ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் வித்வான்.ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த சந்நிதானம் அது. கலை இலக்கிய ரசனையில் டி.கே.சி. என் ஆதர்சம்.கம்பனில் பல மிகைப்பாடல்களைஅடையாளம் கண்டதுடன் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். அதனால் வாழுங்காலத்திலும் சரி அதன்பின்பும் சரிசில விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.கம்பனில் மட்டுமின்றிபல இலக்கியங்களிலும் அவருடைய கைவண்ணம் உண்டு. இடைச்செருகல்,பாடபேதம் போன்ற சாபங்களால் கல்லாய்ப்போன ...
அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்
ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான்எத்தனை பொருத்தம்! ஒரு மனிதன்,தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான் அவன் மிகுந்த புண்ணியம் செய்தவன் என்பதற்கான அடையாளம். இன்று பலருக்கும் நினைத்த நினைப்புக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்னும் பலருக்கோ படித்த படிப்புக்கும் கிடைத்த பிழைப்புக்கும் சம்பந்தமில்லை. நினைப்புக்கும் நிதர்சனத்துக்கும் பாலம் கட்ட முடியாத பரிதவிப்பிலேயே பலருக்கும் வாழ்க்கை முடிந்து விடுகிறது. ...