Blog

/Blog

கம்பனில் மேலாண்மை-2

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல இயலாது.முதன்முதலாக இராம இலக்குவரைப் பார்த்ததுமே, ” தருமமும் தகவுமிவர் தனமெனும் தகையரிவர் கருமமும் பிறிதொரு பொருள் கருதியன்று;அது கருதின் அருமருந்து அனையது;இடை அழிவு வந்துளது,அதனை இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்” என அனுமனால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இடர்நிலைப் பேராண்மை என்னு ...

கம்பனில் மேலாண்மை-1

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் முதல்பகுதி) மேலாண்மை என்னும் சொல்,கடந்த நூற்றாண்டில் குறுகிய எல்லையில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது .பலரும் அலுவலக மேலாண்மை என்பது கோப்புகளுடனும் நிறுவனவிதிகளுடனும் தொடர்புள்ள ஒன்றென்றே கருடியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் விளிம்பெல்லையிலும்,இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் மனித வளத்துறை புத்தொளி கொண்டு புறப்பட்ட போதுதான் மேலாண்மை என்பது மனிதர்கள் சார்ந்தது, உளவியல் சார்ந்தது, தகவல்கள் சார்ந்தது என்றெல்லாம் உணரத் தொடங்கினர். இந்தத் துறைகளில் மேலாண்மை குறித்து ...

அந்த பள்ளிச் சிறுவன்….

பரந்து விரிந்த அந்தப் பள்ளி மைதானத்தின் நடுநாயகமாய், அந்த மேடை இருந்தது. மைதானத்தில் மக்கள் அமர மிகப்பெரிய பந்தல் இடப்பட்டிருந்தது.மைதானத்தில் நிறையபேர் குழுமியிருந்தனர். பெரும்பாலும் பெரியவர்கள்.நடுத்தர வயதினர். கொஞ்சம் இளைஞர்கள். அதே பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் மைதானத்தின் நடுவே அமர்ந்திருந்தனர். காக்கி டிரவுசர். வெண்ணிற அரைக்கை சட்டை. அவர்களில் ஒருவனின் பற்களில் கிளிப் மாட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சிறுவன் சிறு வேப்பங்குச்சியால் கீழே அமர விரிக்கப்பட்டிருந்த சாக்குப் படுதாவை நோண்டிக் கொண்டிருந்தான். மேடையில் பலரும் வந்து ...

அக்கினிக் குஞ்சுதானே அவள்!

அலைபேசி ஒலித்தது. வடநாட்டுக் குரலொன்று .முதலில் ஹிந்தியில் பேசத் தொடங்கி ,நான் இடைமறித்ததும் தமிழில் பேசினார். ஜக்ரிதி என்னும் பெயருடைய 10 மாதக் குழந்தையொன்று புற்றுநோயால் அவதிப்படுவதாகவும்,நாளொன்றுக்கு 18,000 ரூபாய் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும் விபரங்களைக் குறுஞ்செய்தியில் அனுப்புவதாகவும் கூறினார். இத்தகைய அழைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு சில ஐயங்கள் உண்டு. எனவே அந்தக் குறுஞ்செய்தியை முழுமையாகப் பார்க்கவில்லை. ஓரிரு நாட்களில் அதே மனிதர் அழைத்தார். ” உங்களுக்கு விபரங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் உங்களிடமிருந்து எவ்வித உதவியும் ...

அதுவே போதும்

( திருமதி சித்ரா மகேஷ் கேட்டுக் கொண்டபடி அமெரிக்க நண்பர்கள் வெளியிடும் திருவள்ளுவர் மலருக்கு அனுப்பிய கவிதை) என்னென்ன ஐயங்கள் எழுந்த போதும் எதிர்பாரா நிகழ்வுகளில் அதிர்ந்த போதும் தன்னிலையே அறியாமல் துவண்ட போதும் தயக்கங்கள் மனதுக்குள் திரண்ட போதும் பொன்னென்றும் மண்ணென்றும் பதைத்த போதும் பொறுப்புகளில் போராட்டம் பிறந்த போதும் என்னருகே வள்ளுவரே நீங்கள் என்றோ எழுதிவைத்த குறளிருந்தால்…அதுவே போதும்!! இத்தனையும் ஒருமனிதன் எழுத்தா என்றே எந்நாளும் மனிதகுலம் வியந்து பார்க்கும் தத்துவமா? அரசியலா? தனிப்பண்பாடா? ...

ராஜநாயகம்-மீசல்வண்ணக் களஞ்சியப் புலவர்

மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின் அச்சு வடிவம் கண்ட இந்த நூல் இப்போது உரையுடன் வெளிவந்துள்ளது. தமிழ் செழித்த திருப்பனந்தாளில் பிறந்து 1954ல் மலேசியாவில் வந்து குடியேறிய முதுபெரும் புலவர் ப.மு.அன்வர் அவர்கள் உரையெழுதியுள்ளார்கள். கடவுள் வாழ்த்தும் 45 படலங்களும் கொண்ட இந்நூல் வண்ணக்களஞ்சியப் புலவரின் விரிந்த வாசிப்பறிவையும் செறிந்த புனைவுத் திறனையும் வெளிப்படுத்துகிறது. விருத்தப் பாடல்களும் வண்ணப் பாடல்களும் விரவி வருகிற இந்த அரிய படைப்பு ...
More...More...More...More...