இது சிலப்பதிகாரம் அல்ல
அடிகளின் காப்பியம் அளிக்கிற சேதி கடைசியில் வெல்வது காலத்தின் நீதி அரசியல் பிழைத்தால் அறம் கூற்றாகும் கருதிய சதிகள் காற்றுடன் போகும் அரங்கேற்றத்தில் ஆடல் கோலம் தடுமாற்றத்தில் கோவலன் பாவம் பொன்னைக் கொடுத்துப் பெண்ணை வாங்கலாம் என்ன கொடுத்து உண்மை வாங்கலாம்? தாழ்ந்ததைச் செய்தால் தாழ்வையே கூட்டும் ஊழ்வினை அப்படி உருத்துவந்து ஊட்டும் மாதவி பிணக்கு கண்ணகி வழக்கு மாதர்கள் கைகளில் கோவலன் கணக்கு மாதரி கவுந்தி ஆதரித்தாலும் வீதியில் நிறுத்தும் விதிவிட்ட தூது கூடா நட்பால் ...
மரபின் மைந்தனைக் கேளுங்கள்
ஐயா வணக்கம் என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.அடியேன் கோகுல்.ஶ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். திருமந்திரத்தில் தாந்திரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்.ஓர் ஐயம் எனக்கு. திருத்தொண்டர் புராணத்தில் குலச்சிறையாரை அறிமுகப்படுத்தும் போது சேக்கிழார் பெருமான்,” நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையர்” என்று கூறுகிறார். அப்படியென்றால் சிவன் மீது மனதைச் செலுத்திய அடியார்களும் குணநலன் குன்றி நடக்க வாய்ப்புண்டு ...
ஒரு வாசகர்-மூன்று கேள்விகள்
தினமும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?கோபத்தை தவிர்ப்பது எப்படி? பணியாளர்களைக் கையாள்வது எப்படி? கே.சுரேஷ்,வையாபுரிப் பட்டினம்,பண்ருட்டி அன்புள்ள திரு.சுரேஷ் ராஜா கூஜா, ராணி ஆணி, மந்திரி முந்திரி என்று கூச்சலிட்டபடி குழந்தைகள் ஓடுவார்கள். அந்த விளையாட்டின் முடிவில்,ராஜாவிடமிருந்து கூஜாவையும் ராணியிடமிருந்து ஆணியையும் மந்திரி வாங்குவார். பின்னர் ஆணியை சுவரில் அடித்து, கூஜாவை மாட்டி அதில் தன்னிடம் உள்ள முந்திரியைப் போட்டு விடுவார்.(சுத்தியல் அநேகமாக கத்தி வைத்திருக்கும் தளபதியிடம் இருந்திருக்கும்) அதுபோல உங்கள் மூன்று கேள்விகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போல் ...
சிவவாக்கியர்-5
சிவவாக்கியரின் சூட்சுமமான பாடல்களும் அதில் சொல்லப்படும் கணக்குகளும் யோக ரகசியங்கள் ஆதலால் அவற்றை பொதுவில் ஆராய்வது முறையல்ல என்பதென் தனிப்பட்ட எண்ணம். அவை குறித்த பொதுவான புரிதல்கள் குரு மூலமாக ஆன்மீகம் பயிலும் ஆர்வத்தை புதியவர்களுக்கும், அந்நெறியில் நிற்பவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியும் தரும்.அதே நேரம் அவருடைய பக்தியுணர்வும் நன்றியுணர்வும் வெளிப்படும் இடங்கள் அபாரமானவை.”தேங்காய்க்குள் இளநீர் ஏன் வந்ததென எவரேனும் சொல்ல முடியுமா?அதுபோல் இறைவன் எனக்குள் வந்து புகுந்து கொண்டான். அதன்பின் நான் உலகத்தாருடன் தர்க்கம் செய்வதில்லை” ...
சிவவாக்கியர் 4
சிவவாக்கியர் அடிப்படையில் சிறந்த யோகி. யோக சூட்சுமங்கள் பலவற்றையும் அனாயசமாகப் பாடிச் செல்கிறார்.அவருடைய பாடல்கள் யோக ரகசியங்களும் யோகப் பயிற்சியினால் கிடைக்கக் கூடிய பலன்களையும் விரிவாகப் பேசக் கூடியவை. .மனித உடலில் தச வாயுக்கள் உள்ளன.குழந்தை கருவில் இருக்கும் போதே உடனிருக்கும் வாயுவாகிய தனஞ்செயன் மூலாதாரத்தில் ஒடுங்குகிறது. அந்த மனிதர் வாழ்வு முழுவதும் ஆன்மீக அறிமுகமின்றி வாழ்வாரேயானால்,மூலாதாரத்திலேயே ஒடுங்கிக் கிடக்கும் அந்த வாயு, உயிர் பிரிந்த மூன்றாம் நாள், சடலத்தை அழுக வைத்து கபாலம் வழி வெளியேறுகிறது. ...
சிவாவாக்கியர்-3
கடந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், அடையாளங்களை அழிப்பதே சிவவாக்கியரின் பாடல்கள் என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் விதம் விதமான அடையாளங்கள்,எத்தனையோ மனத்தடைகளை ஏற்படுத்துகின்றன.மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் எத்தனையோ விசித்திரமான காரணங்களால் வருகிறது. மெத்தப் படித்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதிக் கொள்கிறார்கள் .அவர்களிடம் “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்ப்பு வந்திளைத்த போது சாத்திரம் உதவுமோ” என்று கேட்கிறார். சிலர் எச்சில் கூட தீட்டு என எண்ணுவார்கள்.அவர்களிடம் “ஓதுகின்ற வேதம் எச்சில்,உள்ள மந்திரங்கள் எச்சில் ...