Blog

/Blog

அன்புள்ள ஆசிரியர்களே – 8

கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.” முதல் மூன்று வெற்றியாளர்களை கண்டறிகிறீர்கள். அடுத்ததாகவும் ஒரு பரிசை அளிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. மேலும் முயன்றால், அதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று உணர்கிறீர்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் ...

கட்சிதம் : (நாவல்)-2

ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக்குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயே இறந்துபோய்விடுகிறது. அந்த விபரம் இளங்கோவனுக்குத் தெரியக்கூடாது என்று செம்மலர் சொல்லியிருக்கிறாள். இளங்கோவன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்கிறான். இந்த இடத்தில் ஓர் அழகான பாத்திரத்தை இளஞ்சேரல் அறிமுகப்படுத்துகிறார். மூன்று பக்கங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம் அது. இளங்கோவனுடைய மிக ...

கட்சிதம் : (நாவல்)-1

ஆசிரியர் : திரு.இளஞ்சேரல் இளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். கட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக இருக்கிறதே என்று யோசித்தேன். வாசிக்க வாசிக்க அவருடைய மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கட்சிதம் நாவலைச் சொல்லலாம் என்று கருதினேன். கொங்குப் பிரதேசத்தில் குறிப்பாக கோவை, இளஞ்சேரலின் சொந்த ஊராகிய இருகூர் பகுதியில் மார்க்சிய தாக்கமுள்ள குடும்பங்களில் நிகழ்கிற முக்கியச்சம்பவங்கள், சர்வதேச அரசியல், ...

அடுத்ததைத் தேடு

உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ ஒவ்வொரு நாளும்தான்; உன்னால் என்னால் காண முடிந்தால் உயர்வுகள் தினமும்தான்; தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று துணைக்கு வருகிறது; முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை முனைந்தால் தருகிறது! எண்ணிய தொன்று எட்டிய தொன்றா? ஏன் இப்படி ஆகும்? எண்ணப் போக்கினில் ஏற்படும் தெளிவே ஏணிப் படியாகும்; வண்ணக் கனவுகள் வசமாய் ஆவதும் வேலையின் திறமாகும்; கண்ணுக்கெதிரே வாய்ப்புகள் திறக்கும் கண்டால் வளம் சூழும்! விழுந்தும் எழுந்தும் விரைகிற அலைதான் கரையைத் தொடுகிறது; ...

எழும் நீயே காற்று!

துளை கொண்ட ஒருமூங்கில் துயர்கொண்டா வாடும்? துளிகூட வலியின்றித் தேனாகப் பாடும்; வலிகொண்டு வடுகொண்டு வந்தோர்தான் யாரும்; நலமுண்டு எனநம்பி நன்னெஞ்சம் வாழும்! பயம்கொண்டால் ஆகாயம் பறவைக்கு பாரம்; சுயம்கண்டால் அதுபாடும் சுகமான ராகம்; அயராதே; அலறாதே; அச்சங்கள் போதும்; உயரங்கள் தொடவேண்டும் உன்பாதை நீளும்! உடைகின்ற அச்சங்கள் உன்வீரம் காக்கும்; தடையென்ற எல்லாமே தூளாக்கிக் காட்டும்; படைகொண்டு வருகின்ற பேராண்மைக் கூட்டம் நடைகண்டு விசைகண்டு நாடுன்னை வாழ்த்தும்! ஊருக்கு முன்பாக உன்திறமை காட்டு; பேருக்கு முன்பாக ...

ஒருநாள் பூக்கும்!

பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை ஆனாலும் நம் பயணம் நீளும் – அதில் ஆனவரை காண வேண்டும் எல்லை! காற்றின்கை காகிதமாய் திரிந்தால்- அதில் குறிப்பிட்ட இலக்கேதும் உண்டோ நேற்றினது பாதிப்பை சுமந்தால் – நம் நெஞ்சிற்கு அமைதிவரல் உண்டோ மாற்றாமல் வைத்த பணம் போலே – இங்கு மனிதசக்தி செயல்மறந்து போனால் ஏற்றங்கள் ...
More...More...More...More...