மார்கழி-19 இல்லறம் வழியே இறையறம்
தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது. இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார். மகளை மணமகன் வசம் ஒப்படைக்கும் போது பெருமிதமும் உவகையும் அழுகையுமாய் கலவை உணர்ச்சிகளில் அவர் சொன்ன சொல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”. அந்தக் குடும்பமே அந்நொடியில் ஆடிப் போனது. பின்னாளில் இளைய மகள் மனதில் கம்பீரமான தன் தந்தை கசிந்து ...
மார்கழி18 ஒளி பெருக உயிர் பெருகும்
மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது. தானெனும் தன்மையை அனைத்திலும் ஊடாட விட்டு அவற்றை தன்னிலிருந்து தனியாகவும் காட்டுகிறான் இறைவன். அதுமட்டுமா?அனைத்திலும் தன் இருப்பை காட்டவும் செய்கிறான்.கண்ணாரக் காணும்படி காட்டுகிறான். ஒளிபொருந்திய மகுடங்களை சூடிய தேவர்கள் சிவபெருமானின் திருவடிகளைப் பணிய நெருங்கும் போது, அவன் திருவடிகளின் பேரொளியில் இவர்களின் ...
தருவாயா….
ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம் வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா? களியின் மயக்கம் கவிதரும் நேரம் குயிலே குயிலே குரல்தருவாயா வெளிச்சம் இசையாய் வருகிற நேரம் வந்துன் அழகால் நிறம் தருவாயா கிளிகள் கொத்தும் கனியின் சுவையாய் கனிந்த அன்பின் வரம்தருவாயா தூரத்து நிலவைத் துரத்தும் முகில்நான் தங்கித் தவழ மலை தருவாயா தீபத்தின் ஒளியை மலர்த்தும் அகல்நான் தீராக் காதலின் திரி தருவாயா மாதவி சிலம்பின் மௌனப் பரல்நான் மகர யாழே மொழிதருவாயா நேசக் குளிரில் நடுங்கும் ...
மார்கழி 17 வந்தவர் நடுவே வந்தவன் சிவன்
இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில் படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப் போவதும் ஏன்நிகழ்கிறது?சிவநாமம் ஏற்படுத்தும் அதிர்வுகளைப்போலவே இன்னொரு சக்தி மிக்க அனுபவமும் இப்பெண்களுக்கு நேர்ந்துள்ளது. பிரம்ம முகூர்த்தப் பொழுதில், சிவநாம சங்கமத்தில் சிவனுடைய இருப்பை சூட்சுமமாக உணர்ந்திருக்கின்றனர். அந்த தன்மையின் வீச்சைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுதலும் சமாதிநிலை அடைதலும்நிகழ்ந்திருக்கின்றன. இங்கு நம் ...
மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்
முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும், முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக மாணிக்கவாசகர் பாடுவதும் ஒரே உத்திதானா என்றால், இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில் இங்கே நிறத்தால் மட்டும் முகிலானது அம்பிகையை ஒத்ததாக இல்லை.அது உருக்கொள்ளும் போதே அம்பிகையின் அருட்செயலுடன் ஒப்புநோக்கத்தக்க செயலொன்றை செய்கிறது. “முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து” முகிலானது கடல் நீரை முகந்து ...
மார்கழி-15-ஆண்டவனைப் பாடுவதா? அடியவரைப் பாடுவதா?
இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது. சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர் தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும், அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில் ‘நம்பெருமான்’என்பதும் இயற்கை. முதல்நிலை உரிமை பற்றிய நிலை.இரண்டாம் நிலை,உறவு பற்றிய நிலை. தனிமையிலும் தொண்டர் குழாத்திலும் மாறி மாறி இறைவன் பெருமையையே வாய் ஓயாமல் பேசுகிற இயல்பு கொண்ட இப்பெண்,ஒவ்வொரு முறை இறைவன் திருநாமத்தை சொல்லும் போதும்,அவள் கண்களில் நீர் பெருகிய ...