மார்கழி-1-ஏன் மயங்குகிறாள் இந்த மாது?
மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள். பாவை பாடல் ஒவ்வொன்றையும் பல்வேறு நிலைகளில் காட்சிப்படுத்திப் பார்ப்பது அவரவரின் பக்குவத்திற்கேற்றது. திருவெம்பாவையின் முதல் பாடல் அப்படி காட்சிப்படுத்திப் பார்க்கத்தக்கது.”எல்லையிலாததும் அரியதுமான” பெருஞ்சோதிப் பிழம்பாகிய சிவபெருமானின் பெருமையை நான் பேசி வருகிறேன்.கூரியதும் பெரியதுமான கண்கள் கொண்ட பெண்ணே! கண் திறந்து பார்க்கவில்லையா?உன் ...
உன்னைப் புரியுமா உனக்கு?
இன்னொரு மனிதன் எழுதிய சீலையில் உன் தூரிகையை ஓட்டலாகாது; மௌனம் பரப்பிய மேடையில் ஏறி யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ; புராதனசிலைகளின் பக்கவாட்டில் கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு? நீவிழிக் கும் வரை நிதானித் ததன்பின் சூரியன் உதிப்பதாய் சொல்லித் திரிகிறாய் விழுமுன் நிழலில் வண்ணங்கள் நூறு அழகாய்த் தெரிவதாய் அளந்து விடுகிறாய் விக்ரமாதித்தர்கள் முதுகினில் எல்லாம் வலியத் தொற்றும் வேதாளம் நீ வையமே உன்னை விரும்பிச் சுமப்பதாய் பொய்யும் புரட்டும் பரப்பி நடக்கிறாய் ஆறாம் வேதமும் ...
ஸ்ரீராம் மெஸ்ஸின் மூன்றாம் மேசை
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது மேல்தளம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு விரிவாக்கம் கண்டிருக்கிறது. வாசலில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் பள்ளிக்கூடங்களில் ஒட்டப்படும் அறிவுறுத்தல் போல் கறாரான வாசகங்கள் இருக்கும்.தலைமையாசிரியரின் கையெழுத்து ஒன்றுதான் பாக்கி. உணவுக்கு கூப்பன் வாங்கிய கையோடு, “மினரல் வாட்டருக்கு இங்கே பணம் செலுத்தவும்” என்னும் ...
சார்லி சாப்ளின் மௌனத்தின் நாயகன்
அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின் அங்க சேஷ்டைகளை அரும்புப் புன்னகையுடன் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன்தான் வெள்ளித் திரையின் சேஷ்டை நாயகனாய் வலம் வந்த சார்லி சாப்ளின். அந்த அன்னைதான் வறுமையின் கொடுமையால் தன் மகனுக்கிருந்த ஒரே மாற்றுடையை அடகு வைத்து அடுத்தவேளை உணவுக்கு வழிதேடினாள்.அதே அன்னைதான் ...
வாழ்வின் பொருளென்ன…நீ வந்த கதையென்ன…
கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது சாத்தூர் தாண்டியதும் அழைக்கச் சொல்லியிருந்தார் டென்சிங்.மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.நமது நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருபவர். அவருடைய நெடுநாள் நண்பரும், நமது நம்பிக்கை இதழின் தொடக்கநாள் தொட்டு துணையிருக்கும் நல்ல வாசகரும் நலம் விரும்பியுமான கோவில்பட்டி காளிதாஸ் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தேன். ...
ஒருவகை ஞானம்
ஒதுங்கிய கூரை ஒழுகலாச்சு ஓலைகளின் மேல் தங்கப் பூச்சு பதுங்கிய பூனை வெளிவந்தாச்சு புழுக்களிடத்தில் புலிக்கென்ன பேச்சு தூண்டில் முனையில் தூங்கும் முதலை நீண்ட நதிமிசை நெருப்புச் சுடலை தீண்டிய கிளர்ச்சியில் தவிக்கும் விடலை தாண்ட வேண்டும் தன்னலக் கடலை கைப்பிடி அவலில் குசேலனின் அன்பு பொய்யாய் இருந்தால் பெறுவனோ பங்கு எய்தவன் கைகளில் எத்தனை அம்பு எல்லாம் தெரியும் ; எதற்கு வம்பு நிலைக்கண்ணாடி நீட்டுது காலம் நினைப்பும் மிதப்பும் நபும்சகக் கோலம் விலைக்குக் கிடைக்குது ...