எம்.எஸ்.உதயமூர்த்தி-சில நினைவுகள்
தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள்உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச்சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் “மக்கள் சக்திஇயக்கம்”என்று எழுதப்பட்டிருந்தது. அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ஒலிபெருக்கி முன்னர் வந்தபோது ...
தோள்கள் தொட்டுப் பேசவா-6
வாழ்வில் மிகப்பெரிய இடங்களை எட்டிய பிறகும் சின்னச் சின்ன மனத்தடைகளால் சிலர் தேங்கி விடுகிறார்கள்.ஐ.டி.துறையில் பெரிய பொறுப்பில் இருந்த இளம்பெண் இந்தத் தொந்தரவால் தன் இலக்குகளைஎட்ட முடியாமல் தவித்தார்.மனிதவள மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரைகாரணமாக மனநல நிபுணர் ஒருவரை சந்தித்தார். அந்தப் பெண்ணின் குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்,”நீ ஒண்ணுத்துக்கும்ஆகமாட்டே” என்று ஆசீர்வதித்ததும், ஆசிரியர் ஒருவர்,”நீ வீடு கூட்டிதான் பொழைக்கப் போறே”என்று வாழ்த்தியதும் ஆழ்மனதில் தங்கிவிட்டதை அறிய முடிந்தது.அந்த விமர்சனங்களே வளர்ந்த பிறகும் வேகத்தடைகளாய் வந்து வந்து வளர்ச்சிக்குத் தடைபோடுகின்றன. நேற்றைய சுமைகளைவிட இன்றைய வெற்றிகளே ...
சென்னை: மக்களுக்கு மக்கள் துணை
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கடந்த 10 மணிநேரங்களுக்கு இல்லாத போதும் திறந்து விடப்படுகிற ஏரிகளின் தண்ணீர் வெள்ளப் பெருக்காய் வீதிகளில் உலா வருவதுதான் ஆகப் பெரிய சோதனையாய் அமைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுவதும் தங்குமிடம் தேடி மக்கள் அலைவதும் ஓரளவு சமன்பட்டு பற்பல மண்டபங்கள் திரையரங்குகள் வழிபாட்டுத்தலங்கள் மக்கள் தங்கிக் கொள்ள திறந்து விடப்படுகின்றன. மக்கள் நல அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களைத் திரட்டி மண்டபங்கள் பிடித்து உணவு தயார் செய்து சேரிப் பகுதிகளிலும் பிற ...
தோள்கள் தொட்டுப் பேசவா-5
பதின் வயதுகளின் பரவசம் கடந்து இருபதுகளின் நிதர்சனம் நுழைந்து முதிரும் பக்குவத்தின் முப்பதுகளில் வாழும் வாழ்க்கை வலிகளும் வரங்களும் விளைகிறபருவம். கற்று வந்த கல்வியின் நிமிர்வுகளை எல்லாம் பெற்று வரும் அனுபவங்கள் புரட்டிப் போடுகிற பருவம்.சின்னச் சின்ன சம்பவங்கள் வழியே ,வாழ்க்கை தன் உண்மையான முகத்தை உணர்த்தும் தருணம். எதிர்பாராத அனுபவங்களை எதிர்கொள்ள நேர்பவர்கள் இருவேறு விதங்களில் எதிர்கொள்வார்கள். ஒன்று,நிகழ்வதை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அதனை வாழ்க்கை தரும் அறிவுறுத்தலாய்,அறிந்து கொள்ள வேண்டிய அனுபவமாய் ஏற்பார்கள். அல்லது,இந்த ...
தோள்கள் தொட்டுப் பேசவா 4
கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும் முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும். கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். ” நடக்க முடியுமா” என்று தவிக்கும் மனிதனுக்கு, ”பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள். குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். ...
தோள்கள் தொட்டுப் பேசவா-3
ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையில் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் குழந்தைகளும். அதனால்தான் ஞானிகளை ” சேய்போல் இருப்பர் கண்டீர் ” என்று பழம் பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு. குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் ...