வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4 (நிறைவுப் பகுதி)
சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் “முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி” என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் சிதறாமல் இவரால் கதைசொல்ல முடிகிறது. திருமணத்திற்கு முன் தன் ஆண்மை குறித்து ஐயம் கொண்ட இளைஞன் ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -3
விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும் ஒரே சுருதியில் இயங்கும் விதமாக ஓர் எல்லையை உருவாக்கும் என்பதுதான். இமயமலை இத்தனை அடிகள் உயரம் என்று அளந்து சொல்லும் கருவி மலையென்றாலே இத்தனை அடிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது.அந்த அளவுகோலின்படி விந்தியம் ஒரு மலையல்ல. ஆல்ப்ஸ் ஒரு ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -2
“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என அடுக்கிக் கொண்டு போகிறார் ஜெயமோகன். அவையெல்லாம் சிறுகதையின் எத்தனையோ பண்புகளில் சிலமட்டுமே. சிறுகதையில் கதை இருப்பதும் கலையம்சம் இருப்பதும், வாசிப்பவனுக்கு அதிலிருந்து பெற்றுக் கொள்ள சில அம்சங்கள் இருப்பதும் முக்கியம்.வைரமுத்து சிறுகதைகளில் இவையெல்லாம் உண்டு. குறிப்பிட்ட சில பண்புகள் இருந்தால்தான் அது ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1
வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில் திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார், அதற்கு ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார், http://www.jeyamohan.in/80619 திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில நூல்களைப் பற்றி ஜெ.யின் கருத்தைக் கேட்டு கடிதமெழுதியுள்ளாராம். எனக்கு இந்த அனோஜன், கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எனும் எழுத்தாளரின் நண்பராகவோ வாசகராகவோ இருக்கக் கூடும் என்று தோன்றியது.ஏனெனில் பட்டிமன்றம் ...
ஆதிசங்கரரும் கவியரசரும்
கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் குரல்”. அதன் முதல் பக்கத்தில்,”இது என்னுடைய புத்தகம். இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது. அன்பன்,கண்ணதாசன்”என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தார் கவிஞர். அவர் அடிக்கடி ...
வீணை வந்த விதம்…
நான் கல்லூரி மாணவனாக இருந்த போது திரு. சுகிசிவம் அவர்களும் கோவையில் இருந்தார். புத்தாண்டையொட்டி சென்னைக்கு அவர் சென்றிருந்தார். நானும் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்காக சென்னையில் இருந்தேன். அப்பு முதலி தெருவில் இருந்த அவருடைய இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவரின் மூத்த சகோதரர் திரு.எம்.எஸ்.பெருமாள் அவர்களும் இருந்தார்.எம். எஸ் பற்றி பேச்சு வந்தது.திரு.பெருமாள் சொன்னார்,எம்.எஸ். சின் தாய் வீணை வித்வான் அல்லவா!மடியிலேந்தி வாசித்து வாசித்து, அந்த நாதம் கருப்பையில் குடிகொண்டு எம்.எஸ். ஆக பிறந்தது” என்று. ...