Blog

/Blog

வருடங்கள் மாறும்!

வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்; பருவங்கள் நிறம் மாறலாம் உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும் உலகத்தின் நிலை மாறலாம் கருவங்கள் தீரும் கருணை உண்டாகும் கனிவோடு நாம் வாழலாம் ஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று உயர்வெல்லாம் நாம்காணலாம்! பிழைசெய்வதுண்டு சரிசெய்வதுண்டு பழியேதும் நிலையில்லையே மழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும் அதனாலே தவறில்லையே இழைகூடப் பாவம் இல்லாத யாரும் இங்கில்லை இங்கில்லையே குழையாத சோறா குலுங்காத தேரா குறையின்றி உலகில்லையே! நீஉன்னை நம்பு நலம்சேரும் ...

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது? -ஆ.ரேவதி, தாரமங்கலம். திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கேளிக்கைத் தன்மை மிகுதியாக இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இதே சூழலில்தான், கருத்தியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களும் வருகின்றன. கோடிக்கணக்கில் ரூபாய்கள் புழங்கும் துறை திரைத்துறை. எனவே மொத்தமும் சிதைந்து விட்டது என்று சொல்வதும் மிகை. முழுவதும் ...

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா? அ.அருள், ராமநாதபுரம். முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கு வழிகாட்ட தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள். இன்று, இளைஞர்களை எவ்வித உள்நோக்கமும் இன்றி வழிகாட்டவோ, வளர்த்தெடுக்கவோ சரியான தலைவர்கள் இல்லை. எனவே இந்தச் சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கவில்லை. ...

மரபின் மைந்தன் பதில்கள்

இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்? ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை. வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல. நோய்களுக்கு தடுப்பூசி போட்டு வளர்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மனதில் தடுப்பூசி போடாமல் வளர்த்ததே காரணம். குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கையில், பண்பாட்டின் சிறந்த அம்சங்களை கதைகளாகவோ பழக்கங்களாகவோ அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டு இளைஞர்கள் ஆனபின் புலம்புவதில் பயனில்லை. ஒழுக்கமான வாழ்வில் இருக்கும் வசதிகளை, வெற்றிகளைப் ...

மரபின் மைந்தன் பதில்கள்

தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? – மீ.மணியன், வெண்ணந்தூர் தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்னும் விதமாய் நினைக்கத் தொடங்கிவிட்டோம். முதலை ஆள்பவன் முதலாளி. தொழிலை ஆள்பவன் தொழிலாளி. எனவே, நீங்கள் குறிப்பிடும் “தகுதி இல்லாதவர்” என்பவர் முதலாளியாகவும் இருக்கலாம். மேலதிகாரியாகவும் இருக்கலாம். ஒருவருடைய தகுதியின்மையை நிரூபிக்கும் வழி, தன்னுடைய தகுதியைத் தானே நிலைநாட்டுவதுதான். எனக்குத் ...

மரபின் மைந்தன் பதில்கள்

வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது? -ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம் வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் போகலாம். ஆனால் வேலை அனுபவங்கள் என்னும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறனை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். பல புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம். காலம் கனிகிறபோது, உங்களை முழுமையாய் மதிக்கும் இடத்தில் வேலை பெறுவராகவோ, அல்லது பத்துப்பேர்களுக்கு வேலை ...
More...More...More...More...