சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்
“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்”எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே அடக்கம். மன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு என்பாரும் உளர். எல்லாவற்றையும் விட முக்கியம்,முருகன் அவதரிக்கவில்லை என்பதுதான்.குறிப்பிட்ட சங்கல்பத்திற்காக, எங்கும் நிறைந்திருக்கும் ,எல்லாமாகவும் பொலிந்திருக்கும் பரம்பொருள் வடிவுகொண்டு தோன்றியது. அருவமும் ...
பின்வாசல் வழிவந்த ஶ்ரீபதி பத்மநாபா
கோவையில் புகழ்பெற்ற கிறிஸ்துவக் கல்வி நிறுவனம்,நிர்மலா மகளிர் கல்லூரி.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒருநாள் அந்த வளாகத்துக்குள் பரபரப்பாக பின்வாசல் வழியாக நுழைந்தார் ஶ்ரீபதி பத்மநாபா.அங்குமிங்கும் பார்த்தபடி அவர் வரவும் அவரை நோக்கி வேகமாக வந்தார் ஒரு பாதிரியார். பின்வாசல் வழியே வந்தது தவறோ என இவர் தயங்கி நிற்க அருகே வந்த பாதிரியார் உரத்த குரலில் கேட்டார், “என்ன ஶ்ரீபதி! எப்படி இருக்கீங்க?”ஶ்ரீபதிக்கு அதிர்ச்சி. பாதிரியாரை அடையாளம் தெரியவில்லை.அதேநேரம் எங்கோ பார்த்தது போலவும் இருந்தது.சில விநாடிகளிலேயே அடையாளம் தெரிந்து ...
ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி!
கண்ணனைப் பற்றிய கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் இதுவும் ஒன்று. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தான்சேன் இசையால் விளக்கில் ஒளிகொண்ர்ந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் “ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி”என்னும் வரியில் சூட்சுமமாய் சுடரும் தொனிப்பொருள், கவிஞர் உத்தேசித்து எழுதியதாகவும் இருக்கலாம். வந்து விழுந்ததாகவும் இருக்கலாம். இறைவன் முன் ஏற்றப்படும் ஒரு சுடர், நெருப்பென்னும் பெரும்பூதம் இறை சந்நிதியில்கட்டுப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. நெருப்பு பயன்பாட்டுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டிருப்பது தமிழின் மொழிவளத்தை உணர்த்துகிறது. தழல்,கனல் போன்ற சொற்களில் ...
அந்த விமானம் கிளம்பட்டும்
உறுமிக் கிளம்பி ஓடு தளம் ஓடி திரும்பி நகர்ந்து திடுமென்று விசைகொண்டு மெல்ல எழும்பி முன்சக்கரம் உயர்த்தி செல்லும் விமானமது ‘ஜிவ்’வென்று பறக்கட்டும்; உள்ளே பரபரப்பும் உயிர்கள் படும் தவிப்பும் மெள்ள சமன்கொள்ள மேலெழும்பும் வேகமுமாய் எத்தனையோ உணர்ச்சிகளை ஏந்திப் பறக்கட்டும்; புத்தகப் பக்கம்போல் புரள்கின்ற காற்றலையில் எத்தனையோ யுகங்கண்ட ஏகாந்த வெளியின்மிசை தத்துவத்தின் முடிதேடும் தேடலைப்போல் முந்தட்டும்; வந்தவழி இன்னதென்னும் வரைபடமும் காணவில்லை இந்தப் பயணம் எதுவரையோ தெரியவில்லை; வலவன் செலுத்துகிறான் வலம் இடமும் சொல்லாமல் ...
மரபின் மைந்தன் வலைத்தளம் தொடக்கவிழா : கல்யாண்ஜி வாசித்த கவிதை
இதயதளம் அனைத்தோடும் இணைப்புள்ள இவனுக்கு இணையதளத் துவக்கவிழா இன்றைக்கா?நாள்திறக்கும் உதயமுதல் அந்திவரை உலகெல்லாம் பொன்னொளிரும் உற்சாக வெயிலுக்கா புதிதாக ஆரத்தி? பிணையவொரு பொங்கரவம் பிறைசூடும் விரிசடையோன் பிள்ளைக்கா இன்றைக்குப் பெயர்சூட்டும் வைபோகம்? துணைவருவோர் சிலநூறு,தொடர்பவரோ பலநூறாய் துலங்குகிற ஒருவனுக்கா தொட்டிலிட்டுத் தாலாட்டு? கங்கையிலே நீச்சலிட்டுக் கரையேறி வந்தவர்க்கா கணினியிலே படகுவிடக் கற்பிக்கப் போகின்றோம்? அங்கையிலே திருக்கடையூர் அபிராமி தந்த தமிழ் அம்பலங்கள் அனைத்திலுமே அரங்கேறி நின்றதன்பின் இங்கெதற்கு அகரமுதல் எழுதுவிக்கும் முதற்பாடம்? ஏடெல்லாம் மறையோதி,ஈசனவன் பெயர்பாடி பொங்கிவரும் ...
அகர முதல எழுத்தெல்லாம்….
அகரம் எனும் எழுத்தில்தான் அனைத்தும் ஆரம்பம். சரியாகச் சொல்வதெனில் “அ” எனும் ஒலியில்தான் அனைத்தும் ஆரம்பம். பிரபஞ்சத்தின் மூலஒலியென மதிக்கப்படுவது பிரணவம். அதன் முதல் பகுதி அகரம்.இந்த விளக்கத்தில் இறங்கினால் அது வேறெங்கோ கொண்டு நிறுத்தும்.அதுவல்ல நான் சொல்ல வந்தது. அ எனும் எழுத்தின் போக்கினை கவனித்தால் அது வாழ்வியல் உண்மையின் வெளிப்பாடாக இருப்பதை உணரலாம். 0 என சுழித்து மேல்நோக்கிக் கிளம்பும் எழுத்து கீழிறங்குகிறது. பின்னர் மேலெழும்பி வலது புறமாய் திசைமாறி செல்கிறது. அப்புறம் ...