பன்முகங்கள்
ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும் ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும் ஒரு பாரதிக்கு வறுமையிலும் வாழப் பிடிக்கும்.. இந்த எல்லா பாரதிகளையும் காளிக்கு ரொம்பப் பிடிக்கும் ...
அந்த மூன்று பெண்கள்
அந்த மூன்று பெண்களுக்கும் அன்புமட்டும் தெரியும் அந்தமூன்று பெண்களாலே அற்புதங்கள் நிகழும் அந்தமூன்று பெண்கள் பார்க்க அவதி யாவும் அகலும் அந்த மூன்று பெண்களாலே உலகம் இங்கு சுழலும் கலைமகளின் கருணை கொண்டு கல்வி கற்பான் சிறுவன் அலைமகளின்ஆசிபெற்று ஆட்சி கொள்வான் இளைஞன் மலைமகளும் மனது வைத்தால் மேன்மைகொள்வான் மனிதன் விலையிலாத இவர்வரங்கள் வாங்கியவன் தலைவன் சாத்திரங்கள் இவர்கள்புகழ் சாற்றிநிற்கும் நாளும் ராத்திரிகள் ஒன்பதுமே ரஞ்சிதமாய் ஜாலம் மாத்திரைப் பொழுதுகூட மறந்திடாமல் நாமும் காத்துநிற்கும் அன்னையரை கருத்தில்வைத்தால் ...
பிரபஞ்சம் இவளால் வாழும்
சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம் சுந்தரி சினங்கொண்ட கோலம் மழுதொடும் தேவி மலைமகள் முன்னே மகிஷன் விழுகிற நேரம் தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர் தொல்லைகள் தீர்கிற காலம் தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும் தாய்மையின் விசித்திர ஜாலம் மர்த்தனம் என்றால் வதைப்பதா? இல்லை மென்மை செய்வது தானே அத்திரம் சத்திரம் ஆடிடும் நாடகம் அரக்கனும் அருள்பெறத்தானே நர்த்தனத் திருவடி சிரசினில் பதிந்திட நடுங்கிய அரக்கனும் விழுவான் எத்தனை யுகங்கள் அன்னையின் பதங்கள் ஏந்தும் பெருமையில் தொழுவான் ...
முக்திச் சுடராய் சிரிப்பவள்
மேற்கே பார்க்கும் அமுத கடேசன் முழுநிலா பார்ப்பான் தினம்தினம் ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும் அவள்தரி சனமோ சுகம் சுகம் பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும் புதிய விநோதங்கள் அவள்வசம் காக்கும் எங்கள் அபிராமிக்கு கண்களில் காதல் பரவசம் செக்கச் சிவந்த பட்டினை உடுத்தி செந்தழல் போலே ஜொலிப்பவள் பக்கத் திருந்து பட்டர் பாடிய பதங்கள் கேட்டு ரசிப்பவள் தக்கத் திமியென தாளம் கொட்டத் தனக்குள் பாடல் இசைப்பவள் முக்கண் கொண்டோன் மோகக் கனலாய் முக்திச் சுடராய் ...
பைரவி பேரருள்
ஒய்யாரக் கண்களில் மையாடும் சாகசம் ஒருநூறு மின்னல் வனம் வையத்து மாந்தரை வாழ்விக்கும் அற்புதம் வினைதீர்க்கும் அன்னைமனம் கைநீட்டி ஆட்கொளும் கருணையின் உன்னதம் காளியின் சாம்ராஜ்ஜியம் நைகின்ற நெஞ்சோடு நலமெலாம் தந்திடும் நீலியின் நவவைபவம் பொன்மஞ்சள் பூச்சோடு பேரெழிலின் வீச்சோடு பைரவி அருள்செய்கிறாள் தென்றலின் வழியாக தெய்வீக மொழியாக தயாபரி ஆட்கொள்கிறாள் சின்னங்கள் நின்றூத சிவிகையதன் மேலேறி சிங்கார உலாப்போகிறாள் என்றென்றும் துணையாக ஏக்கத்தின் முடிவாக எப்போதும் துணையாகிறாள் தீவிரத் தன்மையாய் திகழ்லிங்க பைரவி திருக்கோலம் அருட்கோலமே ...
பாற்கடல் தந்தாளாம்
அமுதம் பிறந்த அதேநொடியில்- அட அவளும் பிறந்தாளாம் உமையாள் மகிழும் அண்ணியென- அவள் உள்ளம் மலர்ந்தாளாம் சுமைகள் அகற்றும் கருணையினாள்- நல்ல சுபிட்சம் தருவாளாம் கமலந் தன்னில் அமர்ந்தபடி- நம் கவலைகள் களைவாளாம் மாதவன் முகுந்தன் மணிமார்பில்- எங்கள் மலர்மகள் அமர்வாளாம் கோதை ஒருத்தி குடிசையிலே- தங்கக் கனிகளைப் பொழிந்தாளாம் ஆதி சங்கரர் தோத்திரத்தில்- அவள் அகமிக மகிழ்ந்தாளாம் பாதம் பதிக்கும் கருணையினால்- நல்ல பயிர்கள் வளர்ப்பாளாம் உண்ணும் உணவில்அவளிருப்பாள்- நல்ல உறைவிடம் தருவாளாம் எண்ணும் காரியம் ...