எங்கள் மூலஸ்தானம்
காலத்தின் மடிகூட சிம்மாசனம்-எங்கள் கவிவேந்தன் கோலோச்சும் மயிலாசனம் கோலங்கள் பலகாட்டும் அருட்காவியம்-அவன் கருத்தினிலே வந்ததெல்லாம் கிருஷ்ணார்ப்பணம் நீலவான் பரப்பிலவன் நாதம்வரும்-நம் நெஞ்சோடு மருந்தாகப் பாடம் தரும் தாலாட்டும் மடியாக தமிழின்சுகம்-இங்கு தந்தவனை கைகூப்பும் எங்கள் இனம் சிறுகூடல் பட்டிவிட்டு சிக்காகோவிலே-அவன் சிறகுதனை விரித்ததுவும் இந்நாளிலே மறுமாசு இல்லாத மனக்கோவிலே-வாணி மலர்ப்பதங்கள் வைத்ததுவும் அவன் நாவிலே நறும் பூக்கள் உறவாடும் வனமாகவே-இங்கு நம்கண்ண தாசனும் விளையாடவே குறும்பான ஞானியென நடமாடியே-சென்ற கவிவாணன் புகழிங்கு நிலையாகவே! என்னென்ன சந்தங்கள் தந்தானம்மா-அவன் ...
பொய்யாத வான்முகில்
அவள்மடியில் ஒருவீணை அவள்தந்த ஸ்வரம் பாடும் அவள் விழியில் மலர்கருணை அடியேனின் கவியாகும் அவள் துகிலில் நிறைவெண்மை அது கலையின் மடியாகும் அவள்வரையும் ஒருகோடு அதுகோலம் பலபோடும் வாணியவள் வகுத்தபடி வையமிது சுழல்கிறது பேணியவள் காப்பவையே பூமியிலே நிலைக்கிறது காணிநிலம் கேட்டவனை கம்பனெனும் மூத்தவனை ஏணியென ஏற்றியவள் எனக்கும்கூட இடமளித்தாள் களிதொட்ட இசையெல்லாம் கலைமகளின் குரலாகும் உளிதொட்ட கல்லையெல்லாம் உயிர்ப்பதவள் விரலாகும் வளிதொட்ட நாசியிலே வரும்சுவாசக் கலைதந்தாள் தெளிவுற்ற தத்துவங்கள் தேவதேவி அருள்கின்றாள் பொய்யாத வான்முகிலாய் புவிகாக்கும் ...
பதில்தருவாள்
விரிவாய் கதைகள் பலபேச-அடி வேறொரு தெய்வம் வாய்ப்பதுண்டோ பரிவாய் கேட்டு பதில்பேச-அந்தப் பரம சிவனுக்கு நேரமுண்டோ திருவாய் மலர்வாள் பராசக்தி-அதில் தீர்ந்து தொலையும் நம்கவலை கருவாய்த் திரண்ட நாள்முதலாய்-நாம் கண்டிருக்கின்றோம் தாயவளை எந்தக் கணமும் நம்பின்னே-அவள் ஏனோ ஏனோ தொடர்கின்றாள் சந்திப்போம் எனத் திரும்புகையில்-அட சடுதியில் ஓடி மறைகின்றாள் வந்த படியே இருக்கின்றாள்-என வீசி நடந்தால் தொல்லையில்லை சந்தேகங்கள் வந்தாலோ-அந்தச் சுந்தரி அதன்பின் வருவதில்லை வெண்பனி மூடிய முகடுகளில்-அவள் வெய்யில் கீற்றென விழுகின்றாள் தண்ணெனக் குளிரும் வைகறையில்-அவள் ...
தேவியின் சிறுவிரல்
மண்ணில் முளைக்கும் எதுவும் நீ மனதில் துளிர்க்கும் கவிதை நீ விண்ணின் நீல விரிவில் நீ விடையில் தொடரும் கேள்வி நீ பண்ணில் பொதியும் மௌனம்நீ பரவும் காற்றின் பரிவும்நீ எண்ணில் எல்லாப் பொருளும் நீ எண்ணத் தொலையா எழிலும் நீ சூலம் ஏந்தும் கைகள்தான் சொக்கட்டானும் உருட்டுதடி காலம் உருட்டும் கைகள்தான் கவளம் உருட்டிப் போடுதடி ஆலம் உண்டோன் பாகத்தில் அமுதம் பூத்துச் சிரிக்கிறதே தூலம் ஆடும் ஆட்டத்தை தூர நின்று பார்க்கிறதே வெய்யில் ...
ஏதோ சொல்கிறது
எங்கோ கேட்கும் காலடி ஓசை ஏதோ சொல்கிறது இங்கும் அங்கும் அதிரும் சலங்கை இரவை ஆள்கிறது குங்கும வாசம் கமழ்கிற திசையில் காட்சி மலர்கிறது அங்கயற் கண்ணி ஆளும் பிரபஞ்சம் அவளால் சுழல்கிறது எத்தனை உயிர்கள் உறங்கவைத்தாளோ எங்கே மறைத்தாளோ புத்தம் புதிதாய் உயிர்களைப் படைத்து பூமியில் இறைத்தாளோ வித்தகி அவளின் விருப்பங்கள் தானே விடியலென் றாகிறது நர்த்தனம் புரியும் நளின மலர்ப்பதம் நம்முடன் வருகிறது பீடங்கள் ஆள்பவள் பீஜங்கள் எல்லாம் புனிதத்தின் விதையாகும் மூடங்கள் எரிக்கிற ...
ஈஷாவில்..ஒருநாள் மௌனத்தில்..
எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்… நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன; பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின; சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை; பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும் ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை; முந்திக் கொள்கிற முந்திரிச் சொற்கள் மந்திர மௌனத்தின் மதுவில் ஊறின; கண்கள் இரண்டும் கோமுகி ஆகிட பண்கள் மலர்ந்து பாடல் கனிந்தது; மூன்றாம் கண்ணின் மெல்லிய திறப்பாய் ஊன்றிய திருவடி உணரும் சிலிர்ப்பாய் தேனின் ஒருதுளி திரளும் தவிப்பாய் ஆன்ற மௌனம் அளிக்கும் அற்புதம்; ...