Blog

/Blog

இதுவும் சேர்ந்ததே அது

பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன் படங்களின் மௌனம் என்ன நிறம்? நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன் நேர்த்தியும் பதமும் என்னவிதம்? இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம் நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த நொடியினில் நினைத்தேன்..என்ன சுகம்! ஆற்றின் குறுமணல் கைகளிலே-கொஞ்சம் அள்ளியெடுக்கிற வேளையிலே கீற்றென உரசும் குறுகுறுப்பில்-மெல்ல கிளர்கிற புன்னகை உன்நினைவு  நேற்றின் துவர்ப்பும் தேனினிப்பும்-எந்த நொடியிலும் வெடிக்கும் கோபங்களும் ஏற்றிய ஆசையின் தீபத்திலே-அடி எண்ணெய் எப்படி வார்க்கிறது? வார்த்தைகள் எத்தனை இறைத்திருப்போம்-அதன் விளிம்பினில் மௌனங்கள் பூத்திருப்போம் ...

படகுக்காரர்கள் பார்வைக்கு….

 உடலெனும் கனவு; சுடலையில் விறகு;  கடலெனும் வினைகள்  கடந்திடும் படகு; படகில் சிலபேர் பவவினை கடப்பார்; படகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்; கற்றவை ,கேட்டவை, கண்டவை என்று பற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார் விற்று வரவில் வினைகள் வளர்ப்பார்; வெற்றுப் படகே விரைய வல்லது; வட்டியும் முதலுமாய் வாங்கிச் சேர்த்ததை கொட்டிக் கவிழ்ப்பவர் கெட்டிக் காரர்; மலர்நிகர் குருவின் மணிக்கழல் இரண்டும் வலிக்கும் துடுப்பாய் வாய்ப்பவர் கடப்பார் நீச்சல் தெரிந்த நினைவில் குதிப்பவர் வீச்சில் சுருண்டு வெறுமனே ...

எங்கிருந்தோ வந்தான்

காரணம் தெரியவில்லை.. அவன் காம்போதி வாசித்தான் சுரங்களின் சுவடறியா.. கரங்களில் குழலேந்தி இதுவரை தொட்டறியா துளைகளில் விரல்தடவி எவரும் கேட்டறியா இதத்தில் இங்கிதத்தில்… தவமியற்ற அமர்ந்தவுடன் தேடிவந்த வரம்போல காரணம் தெரியவில்லை…அவன் காம்போதி வாசித்தான் தொடுத்த பூக்களிடை துலங்கும் கதம்பங்களை எடுத்தெடுத்துக் கோர்க்கும் இளம்விரல்கள் லாவகமாய் அடுத்தடுத்த ராகத்தில் அநாயசமாய் சஞ்சரித்து சிலிர்த்த சபைநடுவே சிங்காரக் கண்ணனைப்போல்.. மோகக் குழல்தடவி-அவன் மோகனம் வாசித்தான் ஒற்றை முலையாலே ஊரெரித்தாள் கோபத்தை முற்றத்தில் துகில்பற்ற மூண்டெழுந்த சாபத்தை பற்றவைத்த கனல்துண்டாய் ...

விசுவம் எங்கும் அவன்நாதம்

கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா ஆர்மோனியத்தின் ஆளுமையாய் அமர கவியின் தோழமையாய் வேறொன்றெதுவும் அறியாமல் வேர்விட்டிருந்த மேதைமையாய் தாரா கணமாய் ஒளிர்ந்தானே தன்னிகர் இல்லா எம்.எஸ்.வி பாரோர் அழுது கேட்டாலும் பரமன் மீண்டும் தருவானா நாடக உலகில் நுழைந்தவனை நாளும் பாடுகள் பட்டவனை மூடச் சிலபேர் முயன்றாலும் ...

கோவை கண்ணதாசன் கழகம் கண்டன எதிரொலி: ஸ்லீப்வெல் நிறுவனம் முதல்கட்ட நடவடிக்கை

      கவியரசு கண்ணதாசனின் ‘மலர்ந்தும் மலராத பாதிமலர்போல’’ எனும் பாடலை ஸ்லீப்வெல் படுக்கை விளம்பரத்திற்கு தவறான பொருளில் பயன்படுத்தியதைக் கண்டித்து கோவை கண்ணதாசன் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் மரபின்மைந்தன் முத்தையா கண்டனம் தெரிவித்தார். இது குறித்த விரிவான செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்தது.     இந்தக் கண்டனத்திற்கு ஆதரவாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, திரைப்படத் திறனாய்வுக்காக தேசிய விருது பெற்ற திரு.ஜீவானந்தம்,கலைக்களஞ்சியம் உருவாக்கிய பேராசிரியர் சுப்பிரமணியம் ...

நாதமே எங்கும் நிறை

 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும் குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ! பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி நின்றாயோ எங்கும் நிலைத்து. ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள் செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய் மூட்டைவினை யேற்றி மனிதர் சுமைநீக்கி ஓட்டினையோ சாகரத்தின் உள் மோன சிவானந்த மூர்த்தி! உயிரொளியால் வானளந்த வாமன வள்ளலே-ஊனுதறி தானாய் கரைந்த தயாபரனே ! ஞானத்தின் தேனாய் உயிரில் திகழ். கயிலாய வெற்பில் குளிர்முகிலா னாயோ; ஒயிலான  கங்கையொளிந் தாயோ- வெயிலான ஆதவனின் பொற்கிரணம் ஆனாயோ; ...
More...More...More...More...