Blog

/Blog

அந்தப் புதிர்

திரளும் முகில்கள் தயங்கி நடக்கும் உருளும் தேர்களாய் உயரே அசையும். எந்தப் பரப்பில் எந்த நொடியில் விழுவதென்றே வியூகம் அமைக்கும். சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா? எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும். எம்மழை எவ்விடம்…என்பது எவர்வசம் அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம். ...

ஜெயகாந்தன் – வைரமுத்து சர்ச்சை!-என் யூகம் சரிதான்

குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம். ஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி ...

ஆதலால் அருமை நெஞ்சே

முழக்கங்கள் முனகலாகும் முனகலும் ஓய்ந்து போகும் விளக்கங்கள் விவாதமாகும் விவாதமும் மறந்து போகும் கலக்கங்கள் தெளியலாகும் கேள்விகள் தோன்றும் போகும் நிலைக்கொள விரும்பும் நெஞ்சே நித்தியன் பெயரைப் பாடு மகுடங்கள் களவு போகும் மகிமைகள் மறந்து போகும் தகுதிகள் பழையதாகும் தலைமுறைத் தேவை மாறும் யுகங்களும் உருண்டு போகும் யுக்திகள் ஒருநாள் வீழும் புகையெனப் பிறவி தீரும் புண்ணியன் பாதம் தேடு சாதனை செய்தி யாகும் செய்தியின் வியப்பும் ஓயும் வேதனை சேரும் மாறும் வந்தவை விலகிப் ...

கடப்பாள் என் கடல்

புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப் போடா அதனால் எனக்கென்ன குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள் குடுகுடு எனவந்து நீட்டுகிறாள் கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள் கைகளில் அள்ளித் தேற்றுகிறாள் “துவள வேண்டாம் எப்போதும்-நல்ல துணை நான்” என்று காட்டுகிறாள் சாக்த நெறியாம் வழிபாடாம்-அந்த சாத்திரமேதும் நானறியேன் வேர்த்த நொடியினில் விசிறுகிறாள்- எந்த விரதம் இருந்தினி நான்துதிப்பேன்? “காத்திடல் என்பணி” என்றுரைக்கும்-அவள் காருண்யம் நிறைந்தது; போதாதா? பூத்திடும் புன்னகை ஒளிதந்தாள்- இனி பொல்லா வினைகள் ஓடாதா மேரு சக்கரம் தனிலெல்லாம் -பல மேலோர் ...

மும்மத வேழமாய் இங்கிருந்தான்

மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு கனல்பறவை கொண்ட மரணமிது மீசை வருடும் இருகரங்கள்-அவன் மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க வீசும் வெளிச்ச விழியிரண்டும் -ஒரு விடுகதை போலத் துயின்றிருக்க பேசி  உலுக்கிய இதழிரண்டும் -ஒரு பிரளய முடிவென ஓய்ந்திருக்க ஆசைத் தமிழன் ஜெயகாந்தன்- அங்கே  அமைதி பருகிப் படுத்திருந்தான் சந்தடி ...

எழுத்து மட்டுமா எழுத்தாளன்?

ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர். இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் போல் எழுதாத நேரங்களிலும் உள்ளொளி கனல நின்ற காம்பீர்யன் அவர். தன்னைத் தானே சிகரமாய் உயர்த்தி அந்தசி சிகரத்தின் முகட்டில் தன்னையே ஒளியாய் தகதகக்கச் செய்த ஜோதியாய் சுடராய் சூழொளி விளக்காய் நீடு துலங்கும் நிலை வெளிச்சம் அவர். அவருடைய பாத்திரங்களில் ...
More...More...More...More...