குறும்பாவில் சிலம்பு
மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள் மாசாத்து வான்மகனை மணந்தாள் மானாய் மருண்டாள் மதுரைநடந்தாள் கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள் சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில் சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில் விதிசேர்த்த காரணம் வல்வினையின் காரியம் பதிநீத்தான் கோவலனும் பேர்படைத்தாள் பாவிமகள் பாவில் தூங்காத கண்ணகியின் துயரம் தமிழ்கண்ட கற்புக்கோர் உயரம் ஏங்காமல்ஏங்கி இதயவலிதாங்கி ஓங்கி நின்றாள் ஆனாலும் மாதவியும் வயிரம் கலைக்காக மாதவியை சேர்ந்தான் கோவலனும் ஆனந்தமாய் வாழ்ந்தான் விலையறியா காதலில் விளைந்தவொரு ஊடலில் நிலைதவறி தடுமாறி நடந்தவனோ ...
முதுபெரும் தமிழறிஞர் ல.ச. மறைந்தார்
தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமிக்காக ரசிகமணி வாழ்வு குறித்து எழுதிய நூல் முக்கியமானது. ரசிகமணி பாணியில் செய்யுட்களை இசையுடன் பாடி விவரிக்கும் இவரின் பாணி வித்தியாசமானது.கோவை திரு.ரவீந்திரன் அவர்கள் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் கோவையில் ஓர் ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை அழைத்துச் சென்று 7-8 மணி ...
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு
காடு திருத்திய மானிடர்கள்-ஒரு காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார் வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார் தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ் ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ புத்தம் புதிய குடியரசின் -வெகு புகழ்முகம் இவரெனும் வரலாறு நித்தம் அதிசயத் திட்டங்கள்-தரும் நிகரில் வல்லமை பலவாறு தத்தம் கடமைகள் புரிந்தாலே-ஒரு தேசம் துலங்கும் என்பதற்கு வித்தக சான்றாய் விளங்குகிறார்-இந்த வையம் புகழும் லீகுவான் இயூ அடிப்படை வசதிகள் பெருக்குவதில்-பல அறிவியல் ...
தொட்டதுமே பட்டவினை தூள்
(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை, இமயப் பொருப்பின் சிகரப் பொலிவை-இருப்பை தவானந்தம் பூத்த தருவைகை கூப்பி சிவானந்த மூர்த்தியென்றே சாற்று காவி இடைமறைக்க காருண்யம் கண்நிறைக்க மேவு முகில்துகிலாய் மேனியிலே-பீமுனிப் பட்டினத்தில் வாழும் பரஞ்சுடரின் பொன்னடிகள் தொட்டதுமே பட்டவினை தூள். கைகட்டும் சீடன் கவிகட்டக் காரணமே பொய்முட்ட ...
ஈஷாவில் இருக்கின்ற மாயம்
இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான் ஈஷாவில் இருக்கின்ற மாயம் நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம் சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும் கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே குன்றின்கீழ் ஒளிர்கின்ற கூடம் வார்த்துவைத்த மாதிரிகள் வாழ்க்கையினை ஆக்ரமிக்க வாட்டத்தின் வலிகனிந்த பிறகு பார்த்துவந்த மானிடர்கள் சேர்த்தளித்த சுமையிறக்க பரமநிழல்தேடுகிற பொழுது தீர்த்தத்தில் தலைமுழுகி தீர்ப்புக்குத் தலைவணங்கி திரும்புகையில் முளைக்குமிரு சிறகு வேர்த்தநடை தகிப்பாற வேண்டிநின்ற கனல்மேவ வைத்திருந்த அகந்தையெலாம் விறகு ...
குறும்பாய் சில குறும்பாக்கள்
(ஆங்கில வடிவமான லிமரிக்கின் தமிழ் வடிவம் குறும்பா.அதனாலோ என்னவோ ஆங்கிலச் சொற்களுக்கு அனுமதி உண்டு..) காலையில நடக்குறாரு அப்பன் கேழ்வரகு இட்டிலிதான் டிப்பன் வேலைக்கு இடையே வச்சுதின்ன வடையே மூலையில முடக்கிடுச்சே சுப்பன் பன்றிக்கும் பறவைக்கும் போட்டி பரவுகிறகாய்ச்சலின்பேர் சூட்டி இவ்வுலகை வாட்டி இன்றுவரை லூட்டி அன்றைக்கே மருந்துதந்தாள் பாட்டி கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா குருமா உன் பொண்டாட்டி செய்வாளா ஏழுகிலோ எடைகூடி இடுப்பு பெருத்துதுன்னு ஆழாக்கு அரிசியில சஃபோலா வாட்ஸப்பில் வந்ததொரு தகவல் விநாயகர் பேரில்நல்ல ...