மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்-யாழி
கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் நவீன கவிதைகளின் முகம். பல்லாயிரம் ஆண்டுகள் பின்புலம் கொண்ட தொன்மத்தில் ஊடாடி உருண்டோடி வரும் சொற்கள் நவீன கவிதைகளை மேலும் நவீனமாக்குகின்றன என்பதே அதிசயமான உண்மை. யாழியின் கவிமனம் அத்தகைய தொன்மங்களில் ஊடாடியும் வாழ்வியலின் புத்தம் புதிய ...
பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-5 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)
சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு பகுதி. சக்திஜோதியின் அகவுலகில் சிறகடிக்கும் பறவை, வனத்தையும் வானம் முதலாகிய ஐம்பூதங்களையும் அளாவிப் பறக்கிற அசுணமா எனில் புறவுலகம் சார்ந்த அவரின் பறவை நகர நெரிசலில் தத்திப் பறக்கும் குஞ்சுக் கிளியாய் கூண்டுக் கிளியாய், வாயாடிக் கிளியாய், ஊமைக் கிளியாய் ஆங்காங்கே ...
பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-4 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)
ஒரு பறவையின் சிறகு துளிர்விடும் நாளுக்கு மௌன சாட்சியாய் பஞ்ச பூதங்களும் நிற்கின்றன. தன்னிலிருந்து உந்தியெழ ஆசீர்வதிக்கிறது பூமி. தன்னை நோக்கித் தாவ அழைக்கிறது ஆகாயம். சிறகுகளைக் கோதுகிறது காற்று. சிறகு தாழ்த்தித் தேடினால் தாகம் தணிக்க உத்திரவாதம் தருகிறது நீர். வனமெங்கும் பரவும்பொழுதும் தன் நாவுகளைத் தாண்டிப் பறக்க அவகாசம் அளிக்கிறது நெருப்பு. சங்கத் தமிழ்மனம் காட்டும் பெண்ணுக்கு இயற்கையே தாய்வீடு. நெருங்கின பந்தங்களை விடவும் நேசத்துடன் இயற்கையோடு சொந்தம் கொண்டாடும் மனங்களை சங்க இலக்கியங்களில் ...
பஞ்ச பூதங்களும் ஒரு பறவையும்-3 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து)
பதட்டமுறுகிற ஆண் தனக்குத் தானே புதிராய் தெரிவான்.அதுவும்,தெளிவான ஒரு பெண்ணுக்கு முன்னால் அவன் சமனப்பட முடியாமல் தடுமாறுவது பரிதாபமானதுதான்.அந்த விநாடியில் பெண்மையை,காதலை,தாய்மையை மீறி பெண்மனதில் இருக்கும் பகடை உருளத் தொடங்கிவிட்டால் அங்கே உறவுகள் உருக்குலைகின்றன. மாறாக அவனை சாந்தப்படுத்தி,சமநிலைக்குக் கொணர்ந்து, இதம்செய்து.இதம் பெறும் காத்திருப்பின் கருணை அந்தப் பெண்ணை அற்புதமானவள் ஆக்குகிறது. அந்தக் காத்திருப்பின் நிறைவில் அவளும் பெறுகிறாள் என்றாலும் அவள் தருகிற பங்கே அதிகம்.சொல்லப்போனால் அந்தக் கணத்தை அவளே நிகழ்த்துகிறாள். “ஆழக்கடல் நடுவே மௌனம் ...
பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-2 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)
மெல்லிய வடிவழகும் அதனினும் மெல்லிய இயல்புகளும் கொண்டவளாய் காட்டப்படும் சங்க இலக்கியத் தலைவியரின் குரல், கனமானது. குழைவையும் கனிவையும் தாண்டிய கம்பீரம் ஒளிர்வது. இறைஞ்சுதலாய்,ஏங்குதலாய் ஒலிக்கும் அதே குரல் நுண்ணுணர்வின் உச்சப் பொழுதுகளில் காட்டும் கணநேர விசுவரூபங்களை சங்கப் புலவர்களின் சூரியத் தூரிகைகள் கனல் சித்திரங்களாய் தீட்டிச் செல்வதுண்டு.அவளே அறியாத அவளின் பெற்றிமைமீது ஒளிபாய்ச்சும் சங்கச் செவ்வியை சக்திஜோதியின் கவிதைகளில் காணலாம். இங்கு சக்திஜோதி காட்டும் பெண் தன் காதலுக்குத் தூது செல்ல பிரபஞ்சத்தையே இறைஞ்சுகிறாள். “எவ்விதமாயும் ...
பஞ்சபூதங்களும் ஒரு பறவையும் -1 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)
ஐவகை நிலங்களை ஆழ உழுது பெயர்த்தெடுத்த கிழங்குகளை ஐம்பூதங்களுக்கும் படையலிடும் விதமாய் வேர்மணம் வீசும் கவிதைகள், சக்தி ஜோதியின் கவிதைகள். மண்மணம்,பண்மணம், பெண்மணம் ஆகியமூன்று சொற்களின் எல்லைகள் கடலாய் விரிய அவற்றிடையே இந்தக் கவிதைகள் தூய வெண்சங்காய்த் துலங்குகின்றன. தமிழின் பண்ணியல்புகள் பழகி வரும் சொற்கள் கொண்டு, பெண் மனதின் நுண்ணியல்புகள் காட்டி அதன்வழியே இந்த மண்ணின் நெடுமரபை அறிய வாய்க்கும் விதமாய் கவிதைகள் மலர்வது மிகவும் அரிது. அந்த வகையில் சக்திஜோதியின் கவிதைகள் ...