கருப்பாயி என்றால்….
கருப்பாயி என்றால் கறுப்பென்றா அர்த்தம்? கருப்பையிலே கொண்டாள் ககனம்- சிரிப்பாலே மின்னல் உருவாக்கி மேக மெனப் பொழிவாள் பின்னலிட்ட பிச்சியைப் பற்று கோடை வருங்கால் குளிர்மழையும் ஆவாளே மேடை வருங்கால் மனம்நிறைவாள் -ஜாடையில் எந்தவொரு பெண்ணும் இவளோ எனும்படிக்கு வந்துநிற்கும் பெண்ணை வழுத்து கண்கள் விடுகதையாம் கால்களோ காவியமாம் வண்ணச் சிறுகதையாம் வஞ்சியிடை-எண்ணிலொரு நாவல் பழநிறத்து நாயகியாம் சாமளையாள் காவலென்று வந்த கனிவு தின்னும் கனிக்குள்ளே தேவி விதைவைத்தாள் சின்ன மழலைக்குள் சொல்வைத்தாள்- கன்னியவள் உன்னில் எதைவைத்தாள்? ...
இவன் ஆதியோகி ..இவன் ஆதியோகி….
(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்…இதுதான்) இருளோடு ஜோதி… ஒளிவீசும் நீதி எழில்மங்கை பாதி… இவன் ஆதியோகி நடமாட சுடலை.. பொடிபூசும் மேனி உடனாட கணங்கள்… இவன் ஆதிஞானி சடையோடு புனலாம்… கரமேந்தும் அனலாம் சிரம்மீது நிலவாம்… விழிமூன்றும் வெய்யிலாம் பொன்போல மேனி …திருநீல கண்டம் பொன்கூரை வீடு …கையில்திரு ...
திருமாலும் பழஞ்சோறும்
அமெரிக்கா வாழ் அறிஞரும் ஆய்வாளருமான திரு.நா.கணேசன் திருமாலுக்கும் பழைய சோற்றுக்கும் உள்ள சிலேடைச்சிந்தனைகளை புதுப்பித்தார். சோறு என்றால் முக்தி என்றொரு பொருளும் உள்ளது நினைவுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இந்த வெண்பாக்களை எழுதினேன் மாவடு ஊறவே மாவலி சென்னியில் சேவடி வைத்தவன், சேர்த்துப்பு-மேவாத பாற்கடலில் ஊறும் பழையனவன், முக்தியாம் சோற்றுக் குதவுவனோ சொல் சாதம் பழையதொக்கும் சாரங்கா-வல்வினையின் சேதம் பழையதடா சீர்மிக்க -பாதம் பலதோஷம் தீர்க்கும் பழையதே யன்றோ ஜலதோஷம் இல்லாத ஶ்ரீ கொண்டதோ குள்ளவுரு கேட்டதோ ...
எப்போ வருவாரோ தொடரில்…..
தங்களை அன்புடன் அழைக்கிறோம் ...
பேச்சுப் பேச்சென்ன….பெரும்பூனை வந்தக்கால்….
குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம் வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ குய்யோ முறையோ எனக் கத்திற்று மனனம் செய்தது மறந்து தொலைக்க கவனம் சிதறிக் கிளி அலறிற்று; மனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால் தினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால் தளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது ‘புரட்சிக் கிளி’யென பட்டம் கொடுத்தனர் புரட்டுக் கிளியைப் புலவர் என்றனர் குயில்போல் சுயமாய் கீதம் வராததால் குயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ; தூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன ...