Blog

/Blog

பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்

அகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே  வேண்டாம். மழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது ‘சார்ந்ததன் வண்ணமாதல்” நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும். வாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய “மழை நடந்தோடிய நெகிழ்நிலம்”அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது. காரைக்கால் அம்மை ...

வந்தாள் ஒருநாள் தானாக

இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை ஏதும் செய்திட முடிவதில்லை சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள் செய்கைகள் எதுவும் விளங்கவில்லை வந்தாள் ஒருநாள் தானாக -என்னை வாட்டி வதைக்கிற தேனாக அந்த நாள்முதல் நானுமில்லை-அட அதன்பின் எனதென ஏதுமில்லை   ஒப்பிட  முடியாக் குறும்பியென-மெல்ல உள்ளே தள்ளிக் கதவடைத்தேன் அப்பொழுதும் அவள் அயரவில்லை-தனியே ஆடிக் களிக்கும் குரல் கேட்டேன்  எப்படி சாத்தியம் என்றறிய -நான் எட்டிப் பார்த்தேன் மனமழிந்தேன் சொப்புச் சாமான் வரிசையிலே -அவள் சுற்றும் கோள்களை வைத்திருந்தாள்     ...

ஏதும் குறையில்லை யே

சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும் பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ நஞ்சுண்ட கண்டம்தா னோ சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த நம்பன் தருகின்ற நீறு பூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே நாதன்தாள் தானே நமதரணாம்-சீதங்கொள் வேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின் சூலமே நீயே சுடு. நீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன் ஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும் நாதன் கழலே நினையாயென் நெஞ்சமே ஏதும் ...

சிங்கப்பூர் வருகிறேன்

வாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன் ...

கிழக்கு பார்த்த வீடு

கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால் கீற்று வெளிச்சம் முதலில் தெரியும். அரக்குப் பட்டின் அதீத வாசனை; அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்; கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்; ‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு; ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை; ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை; துளித் துளியாக துலங்கும் அழகு; தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு; பளிங்குக் கண்களில் படரும் குறும்பு; பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை; மேலைத் திசையில் மணிவிழி பதித்து வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்; ...

மாநகர் வாழ்க்கை

சொந்தம் கொள்ள ஒருநதி இல்லை சொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை     பந்தம் கொள்ள ஒரு வனமில்லை     பாதுகாப்பாய் மாநகர் வாழ்க்கை..      பார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை      பார்க்கத் தோன்றி வருபவர் இல்லை      வேர்த்து நடக்க வயல்வெளி இல்லை      வேக வேகமாய் மாநகர் வாழ்க்கை     வழியில் பார்த்து வினவுதல் இல்லை     வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை     ...
More...More...More...More...